வாக்கியம்
என்பது பழைய முறை வாணியல் கணக்கீடுகளில் இன்றைய அறிவியலுக்கு ஏற்ப எவ்வகை
மாறுதலும் மேற்கொள்ளாமல் அப்படியே பழைய கணக்கிடும் முறையை
பின்பற்றுவதாகும். அதையே வாக்கிய ஐந்திறன் அல்லது வாக்கிய பஞ்சாங்கம்
என்று அழைக்கின்றனர்.
இன்றளவும், இந்த வாக்கிய முறை ஐந்திறன் நாள் காட்டிகளே கோவில் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு பயன்படுகிறது.
இந்த முறை ஐந்திறன் நாள் காட்டிகள், திருநெல்வேலி, ஆற்காடு, திருவரங்கம் ஆகிய பகுதிகளில் பயன்படுகின்றன.
இவற்றைக் கொண்டு பலன் கணிக்கும் போது பல பிழைகள் ஏற்படும்.
இன்றைய அறிவியல் சூழலுக்கு ஏற்ப மாறுதல்களை கொண்டு, முழுவதும் அறிவியலின் கணித முறைப்படி கணக்கிடுவது கணித பஞ்சாங்கமாகும்.
கணிணி மென் பொருள்களில் இந்த முறை ஐந்திறன் நாள் காட்டிகள் மட்டுமே பயன்படுத்த இயலும்.
மதுரை பஞ்சாங்கம் என்றழைக்கப்படுவது இதுவே.