ADVERTISEMENT

பத்து பொருத்தம் என்றால் என்ன? 10 மட்டுமே கட்டாயத் தேவை !

பத்து பொருத்தம் என்றால் என்ன? 10 மட்டுமே கட்டாயத் தேவை ! பத்து பொருத்தம் என்றால் என்ன? 10 மட்டுமே கட்டாயத் தேவை !

திருமணம் என்றாலே முதலில் நம் ஞாபகத்திற்கு வருவது திருமண பொருத்தம்.

திருமண பொருத்தம் என்றால், அடுத்து வருவது பத்தில் எத்தனை பொருந்துகிறது.

ஆருடம் என்று ஒன்று நம் மக்களிடைய தோன்றிய போது, முதலில் இந்த திருமண பொருத்தத்தில் 20 பொருத்தங்கள் பார்க்கப்பட்டன.

நாளடைவில், இந்த இருபதில், பத்து மட்டுமே கட்டாயத் தேவை என்று உணரப்பட்டு, அந்த பத்து பொருத்தங்கள் மட்டும் இன்றளவிற்கும் ஆண் - பெண் சாதகத்தை வைத்து பொருத்தம் பார்க்கப்படுகிறது.

இந்த பத்து பொருத்தம் பார்க்க ஜாதகம் கட்டாயத் தேவையா என்றால், கட்டாயம் - கண்டிப்பாக ஆண் - பெண் இருவரது சாதகமும் தேவை.

ஜாதகம் இல்லாதவர்கள், இந்த நிகழ் நிலை தளம் மூலம் ஜாதகம் இன்றி திருமண பத்து பொருத்தம் பார்க்கலாம்.

இந்திய சோதிட முறையில் 27 விண்மீன்களும் 9 கோள்களும் 12 இராசிகளும் உள்ளதாக கணக்கிடப்படுகிறது.

27 விண்மீன்களும், 9 கோள்களும் இந்த 12 இராசிகளில் குறிப்பிட்ட நேர அளவுகளில் தமது பயனத்தை மேற்கொள்வதாக கணக்கீடு செய்யப்படுகிறது.

ஆகவே, 10 பொருத்தம் என்பது, பிறந்த இராசியில் விண்மீன்களின் தடம் எந்த நிலையில் இருந்தது என்பதை பொறுத்து கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.


பெண் சிறப்பாக வாழ வேண்டும்:


இந்த பத்து பொருத்தம் என்பது பெண் இராசி மற்றும் விண்மீன் எந்தளவிற்கு ஆணின் இராசி மற்றும் விண்மீனிற்கு பொருந்துகிறது என்பதை கணிப்பதே எனலாம்.

இந்த பொருத்தம் பார்ப்பது பெண் சிறப்பாக வாழ வேண்டும் என்ற என்னத்தில் தான். அதனால் தான் அவளின் ஆயுள், சிற்றின்ப பொருத்தம் என அனைத்தும் பெண் சார்ந்தே பொருத்தம் பார்க்கப்படுகிறது.


தின பொருத்தம்:


தின பொருத்தம் என்பது கணவன் மணைவி ஆகியோரின் உடல் நலனை குறிப்பதாகும்.

இந்த பொருத்தத்தை பொருத்துத்தான் தம்பதியரின் வாழ்வு நிலை அமையும். அவர்கள் உடல் நோய் இன்றி வாழ இந்த பொருத்தம் இருக்க வேண்டும்.

இந்த பொருத்தம் கண்டறிய பெண்ணின் பிறந்த விண்மீனில் இருந்து ஆணின் விண்மீன் வரை எண்ணி வர வேண்டும். அப்பொழுது 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 என்ற எண்களில் ஏதேனும் ஒன்றில் ஆணின் விண்மீன் நிலை வர வேண்டும். அப்படி வந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள். இதில் 27 ஆவது நிலையில் இருக்கும் விண்மீன்கள் ஒத்து வராது.


2. கண பொருத்தம்


கணம் பொருத்தம் என்பது ஆணும் பெண்ணும் கூடி வாழும் பொழுது ஒருவருக்கொருவர் எவ்வாறு விட்டுக்கொடுத்து வாழ்வார்கள் என்பதை கூறுவதாகும்.

மேலும், இது மன நிலை ஒப்பது மற்றும் பழக்க வழக்கங்களில் ஒத்து போவது குறித்து பார்க்கும் பொருத்தம் ஆகும்.

கணம் என்ற வடமொழி சொல்லிற்கு இணையான தமிழ் சொல் குழு என்பதாகும். அதாவது, இந்த 27 விண்மீன்களும் மூன்று குழுக்களாக செயல்படுகின்றன.

இவற்றை முறையே, கடவுளர் குழு, மனிதர் குழு மற்றும் இராட்சதர் குழு என்று வகை படுத்துகின்றனர்.

இந்த பொருத்தம் பார்க்கும் பொழுது ஆண் மற்றும் பெண்ணின் விண்மீன் ஒரே குழுவில் இருந்தால் சிறப்பு. அதே வேளையில் ஆணின் விண்மின் கூட்டம் இராட்சதன குழுவில் இருந்தால் பெண்ணின் விண்மீன் கடவுளர் குழுவில் இருத்தல் வேண்டும்.


3. மகேந்திரம் பொருத்தம்:


செல்வமும் பிள்ளை பேறும் இந்த மகேந்திரம் பொருத்தத்தின் மூலம் பார்க்கப்படுகிறது.

பெண்ணின் விண்மீனில் இருந்து ஆணின் விண்மீன் நிலை எண்ணப்பட்டால் அது 4, 7, 10, 13, 16, 22, 25 ஆகிய இடத்தில் ஏதாவது ஒன்றில் வந்தால் சிறப்பு.

இந்த பொருத்தம் இல்லாவிட்டால் குழந்தை செல்வமும் பொருள் செல்வமும் அந்த தம்பதியருக்கு சேருவதில் இடர்பாடுகள் இருக்கும்.


4. பெண்ணின் ஆயுள் (ஸ்திரீ தீர்க்கம்):


பெண்ணின் விண்மீனில் இருந்து ஆணின் விண்மீன் 13 ஆவது எண் தாண்டி இருந்தால் பெண்ணிற்கு நல்ல ஆயுள் கிட்டும்.

அதே வேளையில் எண் ஏழுக்குள் இருந்தால் பொருத்தம் இல்லை எனலாம்.

இந்த பொருத்தம் இருந்தால் தான் தம்பதியர் நீண்ட நாட்களுக்கு ஒன்றாக வாழ்வார்கள்.


5. ஆவுடை பொருத்தம் - பெண் உறுப்பு பொருத்தம் - யோனி பொருத்தம் :


இந்த பொருத்தம் இருப்பின் தம்பதியர் உடல் உறவில் மகிழ்வு காண்பர்.

இதில் பெண்ணின் உறுப்பு நிலை விண்மீனை பொருத்து ஆண் விலங்கு, பெண்விலங்கு, மலட்டு விலங்கு என பிரிக்கப்படுகிறது.

சில விலங்குகள் ஒன்றுடன் ஒன்று பகை எனவும், சில நட்பு எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த பொருத்தம் இல்லை என்றால் தம்பதிகளிடையே வாழ்வு சிறப்பாக அமையாது.


6. இராசி பொருத்தம்:


ஆண் பிள்ளை பிறக்குமா என்பதை கணிக்க இது உதவுகிறது. ஆண் பிள்ளைகளே குடும்பத்தின் வாரிசுகள் என்ற கணக்கு கற்காலத்தில் இருந்ததால் இந்த பொருத்தம் பார்க்கப்பட்டது.


7. இராசி இறைவன் பொருத்தம் - இராசி அதிபதி பொருத்தம்:


ஒவ்வொறு இராசிக்கும் இறைவன் கோள் ஒருவர் இருப்பார். ஆணின் இறைவன் கோளும் பெண் இராசியின் இறைவன் கோளும் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லது நட்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும். பகை கோள்களாக இருப்பின் இது ஆணை பெற்றவர்களும் பெண்ணை பெற்றவர்களும் திருமணத்திற்கு பின் பகை கொண்டு இருப்பர் என கொள்ளலாம்.


8. வசிய பொருத்தம் - அன்பு பொருத்தம்:


எந்தளவிற்கு தம்பதியர் அன்புடன் வாழ்வார்கள் என்பதை இந்த பொருத்தம் மூலம் அறியலாம்.

ஆணும் பெண்ணும் கூடி வாழும்பொழுது, நாளடைவில் சலிப்படையாமல் தொடர்ந்து ஒருவரை ஒருவர் அன்பு செய்து வாழ வேண்டுமானால் இந்த பொருத்தம் பார்த்து மணம் முடிப்பது சிறப்பு.


9. ரச்சுப் பொருத்தம் - சரடு பொருத்தம் - தாலி கயிறு பொருத்தம்


கணவருடன் பெண் எந்தளவிற்கு மகிழ்வுடன் வாழ்வாழ் என்பதை இந்த பொருத்த கூறுகிறது.

மேலும் தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழ்வதையும் இந்த பொருத்தம் முடிவு செய்கிறது.

இந்த பொருத்தம் அமையவில்லை எனில் இருவரும் பிரிந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் கூடுதல்.


10. துன்ப நிலை பொருத்தம் - வேதை பொருத்தம்


இந்த பொருத்தம் அமையவில்லை என்றால் தம்பதியர் துன்பத்துடன் வாழ்வார்கள் என கொள்ளலாம்.


தெளிவு:


இந்த பத்து பொருத்தங்களில் ஏழு பொருத்தம் இருந்தாலும் மணம் முடிக்கலாம் என்று சொல்வார்கள்.

இதை தாண்டி முதல் பார்வையிலேயே மணம் ஒத்து போகிறதா என்பதை பார்க்க வேண்டும். அதாவது பத்து பொருத்தமும் இருந்து முதல் பார்வையிலேயே பெண்ணிற்கு ஆணை பிடிக்கவில்லை என்றால் அந்த மண வாழ்வு சிறப்பானதாக இருக்காது.

ஆக பேண்ணிற்கு ஆணையும், ஆணிற்கு பெண்ணையும் மணம் ஒத்து முதல் பார்வையிலேயே விருப்பம் ஏற்பட வேண்டும். இதுவே தலையான பொருத்தம் என ஜோதிடம் கூறுகிறது.

இதை தாண்டி ஜாதகத்தில் தோஷங்கள் ஏதாவது உள்ளனவா என்பதை பார்க்க வேண்டும்.

குறிப்பாக செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், புனர்பூ தோஷம், மாங்கல்ய தோஷம், ஷஷ்டாஷ்டக தோஷம், துவி துவாதச தோஷம் ஆகியவை உள்ளனவா என கவனிக்க வேண்டும்.

ஆண் மற்றும் பெண் இருவரது ஜாதகத்திலும் தனித் தனியாக குடும்ப அமைப்பு, பிள்ளை பேறுக்கான வாய்ப்பு, உடல் உறவு வாய்ப்பு, ஆயுள் நிலை ஆகியவை குறித்தும் பார்க்க வேண்டும்.



Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading