கஜகேசரி யோகம்
கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்).
கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள்.
கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்?
ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் கோள்களின் அமைப்பு அவருக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம். எடுத்துக்காட்டிற்கு, அவருக்கு ஏழரை சனி நடக்கிறது என்று.
இந்த நிலையில் அவருக்கு இந்த கஜகேசரி யோகம் கிடைத்தால், அவர் ஒரு வலிமை பெற்ற யானை-அரிமா போன்று அனைத்து இடரல்களையும் தர்த்து எறிந்துவிடுவார் அல்லவா?
அது தான் இந்த கஜகேசரி யோகத்தின் வலிமை.
எத்தகைய ஜாதக சிக்கல் இருந்தாலும், இந்த யோகம் கிடைத்தால், எல்லா சிக்கல்களையும் எளிதாக தர்த்து எறிந்து மீண்டு விடுவார் அந்த சாகக்காரர்.
உங்கள் ஜாதகத்தில் நிலவு இருக்கும் இடத்தை ஒன்று என கணக்கிட்டு அதில் இருந்து எண்ண துவங்குங்கள்.
அதிலிருந்து 4 ம் இடம் அல்லது 7 ம் இடம் அல்லது 10ம் இடம் என இதில் ஏதாவதொரு இடத்தில் வியாழன் (குரு) இருந்தால் அது “கஜகேசரி” யோகம் ஆகும்.
இதில் வியாழன் அல்லது நிலவு ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ அல்லது நீச்சம் பெறாமலோ இருக்க வேண்டும்.
வியாழன் அல்லது நிலவு விக்கிரம் பெறாமல் இருந்தால் கூடுதல் பலம் பெற்றது என்று கூறலாம்.
ஜாதகத்தில் நிலவோ அல்லது வியாழனோ நீச்சமடைந்தாலும், பலவீனமடைந்தாலும், தேய்பிறை நிலவாக இருந்தாலோ, நவாம்சத்தில் நீச்சமடைந்தாலோ முழு பலன்களை தராது.
இந்த யோகம் பெற்றவர்கள் தோல்விகளை விரட்டி அடித்து வெற்றிகளை எப்பொழுதும் தனதாக்கிக் கொள்வார்கள். எதிரிகள் இவர்களை கண்டால் விலகி ஓட வேண்டிய நிலை இருக்கும்.
கஜகேசரி யோகம் பலனாக செல்வாக்கும், நற்பெயரும், புகழும், பகைவர்களை வெல்லும் திறமும் ஜாதகர் பெற்றிருப்பதுடன், ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருப்பினும் அவையும் வியாழனின் அருள் சிறப்பாக இருப்பதால் விலகி ஓடும்.