ADVERTISEMENT

வெள்ளியின் உரிமையான சிம்ம லக்னத்தில் பிறந்தவரா? தொழில் எப்படி இருக்கும்?

வெள்ளியின் உரிமையான சிம்ம லக்னத்தில் பிறந்தவரா? தொழில் எப்படி இருக்கும்? வெள்ளியின் உரிமையான சிம்ம லக்னத்தில் பிறந்தவரா? தொழில் எப்படி இருக்கும்?

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வருவாய் மற்றும் தொழிலின் உரிமையாளர் மற்றும் காப்பாளர் வெள்ளி ஆவார்.  

வெள்ளி, நல்ல பலன்களைத் தரக்கூடிய கோள் என்பதால், வெள்ளி திரிகோண அமைப்பு பெற்று தனக்கு நட்பு கோள்களான காரி (சனி), அறிவன் (புதன்) போன்ற கோள்களுடன் சேர்க்கை மற்றும் நல்ல பார்வை பெற்றிருந்தால், அத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர்கள் நிலையான வருவாய் கொண்டு அதன்மூலம் மகிழ்வான வாழ்வு கிடைக்கும்.

மேலே குறிப்பிட்டபடி அமைப்பு பெற்றவர்களுக்கு, அறிவன் - காரி - வெள்ளி தசாபுக்தி நேரங்களில் கூடுதலான வருவாயும், செல்வ செழிப்பும், கூட்டு தொழில் அல்லது தாமாக துவங்கிய தொழில் மூலம் பெரிய அளவில் செல்வம் ஈட்டி செல்வந்தராக வாழ்வார்கள்.

சிம்ம லக்னத்திற்கு பத்தாம் வீட்டின் உரிமையாளர் வெள்ளி, கலை மீதான பற்றுதல் கொண்டவர் என்பதால், வெள்ளியே மூன்றாம் வீட்டிற்கும் உரிமையாளராக இருப்பதால், இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, கலை - இசை தொடர்பானவற்றில் ஈடுபாடு பெருமளவில் இருக்கும்.

வெள்ளி வலுவாக அமைந்து, நல்ல கோள்களின் பார்வையுடன் இருந்தால், ஆடை - அணிகலன் - பெண்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் என அவற்றின் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு, பெருமளவு வருவாய் ஜாதகக்காரர் ஈட்டுவார்.

வெள்ளி, நல்ல தன்மைகளுக்கு உரித்தானவரான அறிவனுடன் சேர்க்கை பெற்றிருந்தால், பிறரை வழி நடத்தும் திறனும், அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், கற்பனை செய்தே பலவற்றை கண்டறியும் ஆற்றல், கலை ஆற்றல், என பலவகையான திறன்கள் கொண்டு, ஜாதகக்காரர் திரைத்துறை போன்றவற்றில் வெற்றி வாகை சூடுவார்.  இத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு, அறிவன் வலுப்பெறும் போது, அவர்கள், ஊடகத்துறை, புத்தகம் பதிப்புத்துறை போன்றவற்றில் தாமாக துவங்கி வருவாய் ஈட்டும் யோகம் கிடைக்கும்.  

இவர்களுக்கு, அறிவன் - வியாழன் - வெள்ளி ஆகிய கோள்களின் சேர்க்கை பெற்றால், அத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர்கள், ஆசிரியர் பிறருக்கு அறிவுரை வழங்கக் கூடிய பணி, ஆராய்ச்சியாளர், தம் அறிவாற்றல் கொண்டு வாழ்வில் சிறந்தோங்கும் நிலை, கல்வி கற்பிக்கும் திறன் என பல யோக அமைப்புகள் கொண்டிருப்பார்.

வெள்ளி, ஞாயிறுடன் பத்தாம் வீட்டில் வலுப்பெற்று, அவற்றுடன் செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் அவர்கள் சிறந்த ஆளுமை கொண்டவர்களாக தலைமைப் பதவிகள் அவர்களை தேடி வரக்கூடிய வாய்ப்புகள் கிட்டும்.  இவர்கள் எந்தத் துறையில் பணிபுரிந்தாலும், அவற்றில் தலைமைப் பதவிகள் ஏற்பார்கள்.  

வெள்ளி, ஞாயிறு மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் சேர்க்கை அமைந்தால் அரசு சார்ந்த துறைகளில் நல்ல பதவிகள் கிடைக்கும்.

பத்தாம் வீட்டில் ஞாயிறு மற்றும் வியாழனின் சேர்க்கை, அதனுடன் அவற்றின் பார்வையும் கிடைத்தால், நிலையான வேலை அமைந்து, அதன் மூலம் சிறந்த செல்வம் ஈட்டி, செழிப்பான வாழ்க்கை வாழ்வர்.

வெள்ளி, காரியுடன் சேர்க்கை பெற்றிருந்தால், அத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர்கள், கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு வெற்றி காண்பர்.  இவர்கள் குறிப்பாக, வண்டி வாங்கி விற்பது, அல்லது போக்குவரத்து தொழில் மூலம் பெருமளவில் செல்வம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும்.  இவர்கள் பொதுவாக, தம் பணியாளர்களின் அறிவாற்றல் கொண்டு, தொழில்களில் வெற்றி பெறுவர்.

வெள்ளி, நிலவுடன் சேர்க்கை பெற்று 9 அல்லது 12ஆம் வீட்டில் ராகு அமையப் பெற்றால், அந்த அமைப்பு கொண்டவர்கள் வெளியூர் அல்லது வெளிநாடு தொடர்புகளைக் கொண்டு தமது தொழிலில் வெற்றி பெறுவர். இதுமட்டுமல்லாது, நிலவு பத்தில் உச்சம் பெற்று அமைந்திருந்தால் கடல் - ஆழி (பெருங்கடல்) தொடர்பான பணிகளில் பணிபுரியும் அமைப்பு கிடைக்கும்.

வெள்ளி, செவ்வாயுடன் இணைந்து வலுப்பெற்ற அமைப்பு பெற்றிருந்தால், வீடு - நிலம் - கட்டிட தொழில் ஆகியவற்றின் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடும் யோகம் கிடைக்கும். இவர்களுக்கு நிலவு, கேதுவுடன் சேர்க்கை பெற்ற அமைப்பு இருந்தால், வேதியல், மருந்து, உரம் தொடர்புடைய தொழிலில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.

வெள்ளி, திரிகோணத்தில் வலுவாக அமையப் பெற்று, அதனுடன் காரி மற்றும் அறிவன் இணைந்தால், தாமாக தொழில் துவங்கி அதன் மூலம் பெரிய அளவிலான செல்வம் ஈட்டும் யோகம் அமையும்.

வெள்ளி சிம்ம லக்னத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இடங்களான ஒன்பதாம் வீட்டில் இருந்தால், அத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர், பிறருக்கு கீழ் பணிபுரியும் நிலை ஏற்படும்.

வெள்ளி வலு குறைந்து, காரி - ராகு கோள்களுடன் சேர்க்கை பெற்று, பகை வீடுகளில் அமைந்தால், இத்தகைய ஜாதக அமைப்பு கொண்டவர், முறையான வருவாய் இன்றி, சட்டங்களுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடிய அமைப்பு அமையும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading