ஒருவரின் சாதகத்தில் கன்னி வீட்டில் சுக்கிரன் மட்டும் தனித்து இருந்தாலோ, கன்னி வீட்டில் சுக்கிரன் நீச்சம் அடைந்து செவ்வாயுடன் இணைந்து இருந்தாலோ, லக்கனத்திற்கு 8-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலோ, அல்லது சுக்கிரனக்குரிய இடமாக இல்லாமல் இருந்து அது 7-ம் வீட்டில் இருந்தாலோ, அல்லது லக்கனத்திற்கு 3-ம் வீட்டில் மறைந்து இருந்தாலோ, 12-ம் இடத்தில் மறைந்திருந்தாலோ அது சுக்கிர தோஷம் ஆகும்.
இந்தத் தோஷம் திருமணத்தடை மற்றும் திருமணத்திற்கு தாமதம் ஏற்பட காரணமாக இருக்கிறது.
அதாவது சாதகத்தில் சுக்கிர பகவான் ஏதாவது ஒரு கெடுதல் செய்யும் கோளுடன் இணைந்து இருத்தலே, இந்தத் தோஷத்திற்குக் காரணமாக உள்ளது.
சரியான தசா புத்தி வரும்வரை காத்திருப்பது நல்ல பரிகாரம் ஆகும். இல்லையென்றால் தேவையற்றப் பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும்.
பிற தோஷங்களை ஒப்பிடுகையில் சுக்கிர தோஷம் கெடுதல்களை அளிப்பதில்லை. எனினும், திருமண உறவில் விரிசல் அல்லது பிரிவுக்கு சில நேரங்களில் அது ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
இதற்கு பரிகாரம் தனித்து இருக்கும் சுக்கிர பகவானை வழிபடுவதன் மூலம், சுக்கிர தோஷத்தின் கெடுதல்களைக் குறைக்க இயலும்.