ADVERTISEMENT

ஜோதிட கோள்களும், அவற்றின் செயல் பொறுப்புகளும்

ஜோதிட கோள்களும், அவற்றின் செயல் பொறுப்புகளும் ஜோதிட கோள்களும், அவற்றின் செயல் பொறுப்புகளும்

ஜோதிடத்தில் ஒன்பது கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.  ஒன்பது கோள்களும், ஒவ்வொன்றும் தனக்கான செயல் பொறுப்புக்களை தலைமையேற்று செய்கின்றன.  அவை ஏற்படுத்தும் நல்ல தீய பலன்கள் அவை இருக்கும் ராசி வீடுகளை பொருத்து ஜாதகருக்கு அமைவதாக ஜோதிட கணிப்புகள் எடுத்துரைக்கின்றன.

எந்தெந்த கோள்களுக்கு, என்னென்ன பொறுப்பு தரப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

1.  ஞாயிறு: ஞாயிறு 9 கோள்களின் தலைமை கோள் என கருதப்படுகிறது. இதை தந்தைக்குரியவன் என்று சொல்கிறார்கள். மூதாதையர் மற்றும் நம் மரபு சார்ந்த செயல்களை குறிக்கிறது. எனவே ஒரு ஜாதகரின் ஜாதகத்தில் ஞாயிறு பகை அல்லது தீங்கான நிலை பெற்று இருக்கக் கூடாது. லக்னத்துக்கு 2 7 8 ஆகிய வீடுகளில் இருப்பது, மனைவி அல்லது கணவன் அமைப்பிற்கு நன்மை அல்ல என்றும் சொல்லப்படுகிறது.

2.  திங்கள்: நிலவை தாய்க்கு ஒப்பான நிலைக்கு ஒப்பிடுகின்றனர்.  ஜாதகரின் உயிரைப் பேணிக்காப்பது இந்தத் திங்களின் பணி.  திங்களை உடலுக்கு பொறுப்பானவர் என ஜோதிட நூல்கள் எடுத்துரைக்கின்றன. சிந்தனை, அறிவு ஆகியவற்றை வழிநடத்துவது இந்த திங்கள்.  இத்தகைய தன்மையுடைய திங்கள் லக்கினத்திற்கு 5 8 12 -ல் மறைந்து இருப்பது நல்ல பலனை தராது.

3.  செவ்வாய்:  உடன்பிறப்புகளை ஆட்சி செய்பவன்.  வீடு மனை வாசல் ஆகியவற்றை ஜாதகருக்கு அளவிட்டு தருபவன். செவ்வாயை நிலத்திற்கு உரியவன் என்று ஆருட நூல்கள் எடுத்துரைக்கின்றன.  எனவே செவ்வாய் பகை அல்லது தாழ்வு நிலை பெற்று அல்லது 2 7 8 12 ஆகிய இடங்களில் இடம் பெற்றிருத்தல் கூடாது.

4.  அறிவன் (புதன்):  அறிவன் கல்விக்கு உரியவன். வாழ்க்கை துணைவரின் தாய் தந்தை பலன்களை எடுத்துச் சொல்வதால், அறிவனை மாதுலக்காரன் (மாமனார் - மாமியார்) என்றும் கல்விக்கு உரியவன் என்பதால் கல்விக்காரன் என்றும் அழைக்கின்றனர்.

5.  வியாழன்:  வியாழனை கற்றுத் தருபவருக்கு ஒப்பாக கருதுகின்றனர். பிள்ளைப்பேறு, பொன், பொருள், செல்வம், இவற்றிற்கு இந்த வியாழன் பொறுப்பாக திகழ்கிறது.  ஆகவே வியாழனை செல்வக்காரன் மற்றும் மக மக்கட்பேறுக்காரன் என்று அழைக்கின்றனர்.  இந்த வியாழனுக்கு 6 8 12ல் இருந்தால் அல்லது லக்கினத்திற்கு 6 8 12ல் இருந்தால், வியாழன் தரும் நற்பயன்கள் குறைந்து அல்லது இல்லாமல் போகலாம். சிந்தனை, சிந்திக்கும் திறன் போன்ற அறிவு சார்ந்த அனைத்து செயல்களும் இந்த கோள் வழங்குகிறது.

6.  வெள்ளி:  பாலியல் செயல்பாடுகள் அனைத்திற்கும் உரிமையானது இந்த வெள்ளி.  கணவன் மனைவி அமைப்பை ஏற்படுத்துகிறது என்பதால் இதை உறவுக்காரன் என்றும், மண்ணில் மழை பொழிய வைப்பதால் இதை மழைகோள் என்றும், ஆடு மாடு வண்டி வகைகளை பெருகச் செய்வதால் வண்டிக்காரன், என்றும் வெள்ளியை புகழ்ந்து சொல்கிறார்கள்.  3 6 8 ல் இடம் பெற்று இருப்பதை தீங்கான பலன் தரும் நிலை என்று ஆருடம் கணிக்கிறது. பகை அல்லது தாழ்வு நிலை பெற்று இருப்பதும் ஜாதகருக்கு நல்லதல்ல.

7.  காரி (சனி): காரியை வாழ்நாளை வகுத்துக் கொடுக்கும் பொறுப்பு கொண்டவன் என்கிறது ஜோதிடம். இந்த காரி 2 4 5 7 9 ஆகிய இடங்களில் இடம் பெற்று இருப்பது நற்பலன் சாராத நிலை.

8.  ராகு: ராகுவை பாம்பு கோள் என்றும், நிலையில்லாத கோள் என்று சொன்ன போதிலும், இது செல்வச் செழிப்பை அள்ளித் தருகிறது என்கிறது ஆருடம். இந்த ராகு 1 2 4 5 7 8 ஆகிய வீடுகளிலும், திங்களுக்கு முன் அல்லது பின் இடம் பெற்றிருத்தல் கூடாது.

9.  கேது:  கேதுவை பாம்பு கோள் என்றும், நிலையில்லாத கோள் என்று சொன்ன போதிலும், ஞானம், ஆன்மீகம், மாற்று சிந்தனை ஆகியவற்றிற்கு பொறுப்பாளராக ஆருடம் கருதுகிறது.  ஒருவரின் ஜாதகத்தில் கேது 12ஆம் வீட்டில் அல்லது பகை அல்லது தாழ்வு நிலை என்று இருப்பின், அந்த ஜாதகருக்கு இதுவே கடைசி பிறப்பு என்றும் மறுபிறவி கிடையாது என்றும் சொல்கின்றனர்.  கேது 1 2 4 5 7 8 ஆகிய வீடுகளில் இருப்பது ஜாதகருக்கு நல்லதல்ல.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading