ADVERTISEMENT

முக்கூட்டு கோள்கள் என்றால் என்ன? எதனால் அந்த பெயர்?

முக்கூட்டு கோள்கள் என்றால் என்ன?  எதனால் அந்த பெயர்? முக்கூட்டு கோள்கள் என்றால் என்ன? எதனால் அந்த பெயர்?

அறிவன் (புதன்), வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று கோள்களும் எப்போதுமே 90 பாகைக்குளாகவே, ஒரே வரிசையில், மூன்று ராசி வீடுகளில், முன்னுக்குப் பின்னாக இணைந்து அல்லது பரவி இடம்பெற்று இருக்கும்.

இவ்வாறு அமையப் பெறுவதால், இந்த மூன்று கோள்களையும் " முக்கூட்டு கோள்கள் " என்று அழைக்கிறோம்.

இவைகளில் ஞாயிறை விட வெள்ளிக்கு வேகம் கூடுதலாகவும், வெள்ளியை விட அறிவனுக்கு வேகம் கூடுதலாகவும் உள்ளது. ஆகவே வெள்ளியோ அல்லது அறிவனோ, ஞாயிறை விட்டு விட்டு நான்காவது ராசி வீட்டிற்குச் சென்று விடாதபடி இவ்விரு கோள்களுக்கும் சுனைங்கிய நிலை (வக்கிர கதி) ஏற்படுகிறது.

அறிவன் ஓட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடர் அமைப்பு ஏற்படுகிறது. இது ஏறக்குறைய ஆரூட கணிப்பு நடைமுறையிலும் ஒத்து வருகிறது. அது என்ன என்பது குறித்து கீழே பட்டியலில் காணலாம்:

1.  கும்பம் - மீனம் - மேஷம் - ரிஷபம் - ஆகிய இந்த நான்கு ராசி வீடுகளில் அறிவன் மற்றும் ஞாயிறு ஆகியவை பெரும்பாலான நேரங்களில் கூடி இருக்கும்.

2.  மிதுனம் - கடகம் - சிம்மம் - கன்னி ஆகிய இந்த நான்கு ராசி வீடுகளில் அறிவன், ஞாயிறுக்கு முன் உள்ள ராசி வீடுகளில் பெரும்பாலான நேரங்களில் நிலைகொண்டிருக்கும்.

3.  துலாம் - விருச்சிகம் - தனுசு - மகரம் ஆகிய இந்த நான்கு ராசி வீடுகளில் அறிவன், ஞாயிறுக்கு பின் உள்ள ராசி வீட்டில் பெரும்பாலான நேரங்களில் இருக்கும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading