குரு தோஷம் என்று ஒன்று உள்ளதா? இருக்குமேயானால் குரு தோஷம் என்றால் என்ன?
குரு பார்வை என்பது, என்றைக்குமே நன்மை பயக்கும் பார்வை என்று தான் ஆரஉடம் சொல்கிறது. அபாடி இருக்கு, குரு தோஷம் என சிலர் சொல்லக் கேள்விப்படுகிறோம். குரு தோஷம் என்றால் என்ன என்று பார்க்கலாம்!
முதலில் குரு பெயற்சி என்றால் என்ன என்று பார்க்கலாம்:
ஆண்டுக்கு ஒரு முறை குரு பகவான் என்கிற வியாழன் கோள் ஒரு இராசியில் இருந்து அடுத்த இராசிக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக்கொள்வதாக ஆரஉடம் கணிக்கிறது.
இப்படி பெயற்சி அடையும் பொழுது, வியாழன் கோள் இருக்கும் இராசி பல நன்மைகளை பெறுவதாக ஆரூடம் கணிக்கிறது.
மேலும், தான் நின்ற ( ராசி ) இடத்திலிருந்து 5வது ராசியையும், 9 வது ராசியையும் பார்ப்பார். மற்றும் 7 வது ராசியை நேர் பார்வையாக பார்ப்பார்.
இதில்லாமல், தான் நின்ற ராசிக்கு அடுத்த ராசியையும் அதாவது 2 வது வீடு, மற்றும் 11வது வீட்டையும் சூட்சுமப் பார்வையின் மூலம் பார்ப்பார்.
ஆக, குரு பகவானின் பார்வையானது 5,7,9 மற்றும் 2,11 என ஐந்து ராசிகளைப் பார்ப்பார்.
மேலும், இராசியில் தோஷம் இருக்கும் கட்டத்தை குரு என்கிற வியாழன் பார்த்தால் அந்த தோஷம் விலகும் எனவும் கணிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, திருமண தடை பழிப்பு (தோஷம்) உள்ள ஒரு சாத்தகத்தில் குரு பார்வை சரியாக இருக்குமேயானால், திருமண தடை நீங்கி திருமணம் நடந்தேரும்.
ஏற்கனவே விளக்கியபடி 5,7,9,2,11 ஆகிய இடங்களுக்கு நன்மை செய்யும் குரு என்கிற வியாழன் கோள் மற்ற இடங்களான 1 ( பிறப்பு ராசி) , 3,4,6,8,10,12 ஆகிய இடங்களுக்கு நன்மை குறைவாகவும், பாதிப்புகளை பெருமளவிலும் தரும்.
குருவின் தீமை நிலையை தாங்க முடியுமா?
நன்மைகளை தரவேண்டிய குருவே தீமை நிலை கொண்டால், அதை இராசிக்காரரால் தாங்க முடியுமா?
இதில் ஒன்றை கணக்கில் கொள்ள வேண்டும். குரு, ஆண்டு முழுமைக்கும் நன்மை தருவதில்லை, அதே போல துன்பத்தையும் தருவதில்லை.
ஒரு ஆண்டு குரு பயணிக்கும் பொழுது ஏறக்குறைய 5 1/2 திங்கள்கள் தீய (வக்கிரம்) மற்றும் மறைவு (அஸ்தமனம்) எனும் நிலையை அடைவதால் குரு பெயர்ச்சியின் மொத்த தாக்கமும் பாதி அளவில்தான் ( நன்மையோ, தீமையோ) அந்த இராசிக்காரரை வந்தடையும்.
இப்பேர்பட்ட குரு தோஷம் அடைவது என்றால் என்ன?
ஒருவரின் ஜாதகத்தில் வியாழன் மற்றும் காரி என்கிற சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும், குருவின் சாரத்தில் சனியும் – சனியின் சாரத்தில் குருவும் இருத்தாலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் குரு தோஷம் உள்ள ஜாதகம் ஆகும்.
இவர்கள் வாழ்வில் தாம் உயர்வு நிலை எட்டாமல், பிறரை உயர விடுவதற்கு ஏணியாக மட்டும் செயல்படுவர்.