ADVERTISEMENT

செல்வம் வீட்டில் தங்க மறுக்கிறதா, இதனால் கூட இருக்கலாம்!!!

செல்வம் வீட்டில் தங்க மறுக்கிறதா, இதனால் கூட இருக்கலாம்!!! செல்வம் வீட்டில் தங்க மறுக்கிறதா, இதனால் கூட இருக்கலாம்!!!

புவி வாழ்வை வெறுத்த முனிவர்கள் நம்மை வாழ்த்தும் பொழுது "அணைத்து செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று தான் வாழ்த்துகிறார்கள்.

அப்படியானால், செல்வம் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக கலந்துள்ளது.

மனிதனின் வாழ்நாள் முழுவது தனக்கும் தனது தலைமுறையினருக்குமாக செல்வம் சேர்ப்பதிலேயே  செலவிடப்படுகிறது.

சிலர் பெரும் உழைப்பு உழைக்காமலேயே செல்வர்களாகவும், மற்றவர்கள் என்ன தான் உழைத்தாலும் செல்வம் சேர மறுக்கும் நிலையும் காணமுடிகிறது.

ஏன் இந்த இருவேறு வேறுபாடுகள்?

ஒருவருடைய வீட்டின் அமைப்பு தவறாக இருந்தாலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மலையை நகர்த்தும் அளவு கடினமாக உழைத்தாலும் கடுகளவு தான் பலன் வந்து சேருகிறதே என்ற வேதனை தான் மிஞ்சும்.

பண வரவை தடைசெய்யும் வீட்டின் அமைப்புகள்

வடக்கு முழுவதும் மூடிய வீட்டின் அமைப்பு இருப்பது. நான்கு புறமும் சுற்றுச்சுவர் இல்லாத அமைப்புகள், வடகிழக்கில் வடக்கு பக்கம் சாளரம் இல்லாத அமைப்பு வருவது. வடகிழக்கில் கிழக்கு பக்கம் சாளரம் இல்லாத அமைப்புகள் வந்தாலும் பணத் தட்டுப்பாடு பெருகும்.

வடகிழக்கில் மிகப்பெரிய அளவில் போர்டிக்கோ போன்ற அமைப்புகள் இருப்பது கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள சாளரங்களை திறந்தாலும் வின் தெரியாத அளவில் பெரிய அளவில் போர்டிக்கோ அல்லது தாழ்வாரங்கள் அமைத்திருப்பது. வடகிழக்கிலுள்ள சாள்ரங்களை எப்பொழுதுமே மூடிய நிலையில் வைத்திருப்பது. சாமி அறையை வடகிழக்கில் வைத்து அந்த இடத்தை எப்பொழுதுமே மூடிய நிலையில் வைத்திருப்பது. வடகிழக்கில் கழிவறை வைத்திருப்பது, சமையலறை வைத்திருப்பது, வடகிழக்கில் மாடிப்படி அமைப்பது இவ்வாறு இருக்குமேயானால் அந்த வீட்டில் செல்வம் தங்காது.

வடகிழக்கில் ஞாயிறு ஒளி உள்ளே வர முடியாத அளவிற்கு மிக அருகாமையில் கட்டமைப்புகள் மிக உயரமாக இருப்பது, வடகிழக்கில் மரம், செடி, கொடிகளை வளரவிட்டு, வடகிழக்கு பகுதியை மூடி கதிரவன் தன் ஒளியை வீட்டினுள் செலுத்த இயலா நிலையில் இருப்பதும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் சுற்றுச் சுவருக்கும், வீட்டிற்கும் உள்ள இடைவெளி 6 அடிக்கும் குறைவாக இருப்பது தவறான அமைப்பாகும்.

வடகிழக்கில் தலை வாசலில் நிலை கதவில் வரக்கூடிய நிரந்தர கண்ணாடியை சாளரமாக பயண்படுத்திக் கொள்வது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருக்கும் சாளரங்களை மொத்தமான சீலைதிரை  கொண்டு நிரந்தரமாக மூடி இருப்பது. வடகிழக்கில் சிட் அவுட் கட்டமைப்புக்காக, வடக்கு அல்லது கிழக்கில் சாளரம் இல்லாமல் வீட்டை உருவாக்குவதும், வடக்கிலும், கிழக்கிலும் ஞாயிறு, வெள்ளி, அறிவன் கோள்களை நடுவாக கொண்டு தலை வாசல், தலை சாளரம் நீச்ச பகுதியில் வைத்துக் கொள்வதும் தாவறான அமைப்பாகும்.

நீங்கள் வாழும் வீடுகளில் பண தட்டுப்பாடு இருக்குமானால், மேற் கூறிய அந்த வீட்டின் அமைப்பினால் தான் என்று உறுதியாக சொல்ல முடியும்.



மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading