இன்று வாஸ்த்து ஸ்தாத்திரம் என்று அழைக்கப்படும் கட்டிடங்களுக்கான கட்டமைப்பு விதி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சிவன் ஆலயங்கள் கட்டமைப்பதற்காக ஆகம விதி என்று சிவனடியார்களால் கும்பகோனம் பகுதிகளில் பல ஆய்வுகளை நடத்தி வரையறுக்கப்பட்டதாகும்.
ஆகம விதி தெளிவாக, சிவாலயத்தினுள் எந்த பொருளை எங்கு, எந்த திசை நோக்கி வைக்க வேண்டும் என வரையறுத்துள்ளது.
அதன் படி பார்த்தால், நாள் காட்டி வைக்கும் முறைக்கும் ஒரு முறை பின்பற்றப்பட வேண்டும்.
நம் வீட்டில் உள்ள பொதுவான சில பொருட்களும் அதை எந்தத் திசையை நோக்கி வைக்க வேண்டும், எப்படி வைக்கக் கூடாது என்பதைப் பார்க்கலாம்.
நம் அனைவரின் வீட்டிலும் மணி காட்டி இருக்கும். சுவரில் தொங்க விடும் மணி காட்டியை சரியான திசையில் வைத்தால் தான், தேவையான ஆற்றல் வீட்டில் இருக்கும், அதையே தவறான திசையில் மாட்டினால், எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.
மணி காட்டியை கதவுகளுக்கு மேலே தொங்கவிடக்கூடாது. வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவரிலும் மணி காட்டியை மாட்டக் கூடாது. ஏனெனில், தெற்கு எமனுக்கான திசையாகும்.
மணி காடியை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவரில் தொங்கவிடுவது நல்லது.
மேலும் முகம் பார்க்கும் கண்ணாடியை தவறான திசையில் மற்றும் தவறான இடத்தில் வைத்தால், அதனால், எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் தங்க ஆரம்பிக்கும்.
ஆகவே சுவரில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும். அதே போல் கண்ணாடியை வடக்கு கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாகத் தரையில் இருந்து 4 அல்லது 5 அடிக்கு மேலே கண்ணாடி இருக்க வேண்டும்.
மணி ப்ளாண்ட் என்கிற செடியை வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் பெருகும். அதே போல் இந்த மணி ப்ளாண்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது. மேலும், அறிவியலின் படி இந்த செடி தூய்மையான காற்றை தரும்.