ADVERTISEMENT

தொழில் செய்யும் இடத்திற்கான வாஸ்து

தொழில் செய்யும் இடத்திற்கான வாஸ்து தொழில் செய்யும் இடத்திற்கான வாஸ்து

பலர் தொழிற்சாலை அல்லது கடை அல்லது தொழில் அலுவலகம் அமைத்துவிட்டு, தொழிலில் வருவாய் இல்லை, அல்லது வருவாய் போதுமானதாக இல்லை அல்லது நொடிப்பு ஏற்படுகிறது என சொல்ல கேட்கிறோம்.

அதே வேளையில், அதே ஊரில், அதே தெருவில், மற்ற ஒருவர் அதே தொழிலை சிறப்புடன் செய்து தொழில் வெற்றி பெருகிறார்.

இந்த வேறுபாடு எதனால் ஏற்படுகிறது?  இதற்கும், அந்த தொழில் நடத்தப்படும் இடத்திற்குமான வாஸ்து உள்ளதா?

மலை பகுதிக்கான தொழில் வாஸ்து:


மலை அடிவாரத்தில் தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது. வட கிழக்கில் மேடு இருந்தால் அதனால் செல்வ இழப்பைத் தரும். கிழக்கே இருந்தால் எதிர்மறையான விளைவைத் தரும். வட மேற்கில் இருப்பதும் மாறுபட்ட பலனைத் தரும்.

தெற்கு, மேற்கு, தென் மேற்கு திசைகள் மேடான பகுதியாக  இருந்தால் நன்மை தரும். வடக்கு, கிழக்கு, வடகிழக்கு திசைகளில் மேடான பகுதி இருந்தால் தீமையான பலன்கள் தரும்.

தெற்கே மேடான பகுதி இருப்பது செல்வம் பெருகும். தென்மேற்கே மேடு இருப்பது சிறந்தது. மேற்கே இருப்பதும் சிறப்புடையதாகும்.

ஆறு, நீர் நிலைகள் பகுதிக்கான தொழில் வாஸ்து:

வடக்கு, கிழக்கு, வட கிழக்கு திசையில் இருப்பது நற்பலன் தரும். இதில் வட கிழக்கில் இருப்பது செல்வம் பெருகும்.

தென் கிழக்கில் இருப்பது செல்வம் படிப்படியாக குறையும்.

தெற்கில் இருப்பது – எதிரிகளால் துன்பம் தரும்.

தென் மேற்கில் இருப்பது – அடிக்கடி தொழிலாளர்களால் பிரச்சினை உருவாகும்.

வட மேற்கில் இருப்பது – வீண் செலவுகளைத் தரும். வடக்கில் இருப்பது – செல்வம் பெருகும்.

கடல் பகுதிக்கான வாஸ்து:

வடக்கில், கிழக்கில் கடல் இருந்தால் சிறந்தது.

கோயில் அருகே தொழில் கூடம் அமைப்பதற்கான வாஸ்து:

கோயிலின் நிழல் வியாபார நிலையங்களில் விழக்கூடாது.  மேலும் கொடிக் கம்பம், விளக்குத் தூண் ஆகியவை வியாபார நிலையம், தொழிற்சாலையின் வாயிலுக்கு எதிரில் இருக்கக் கூடாது.

மேம்பாலம் அருகே தொழில் அமைக்க:

மேல்பாலம், அடுக்கு மேம்பாலம் இவற்றிற்கு கீழே அலுவலகம், வியாபார நிலையம், தொழிலகம் இருப்பது படிப்படியாக நசிந்துவிடும்.  ஆகவே இத்தகைய பாலங்கள் அருகே தொழிற்கூடத்தை அமைக்காமல் இருப்பது சிறப்பு.

இடுகாடு, இறைச்சி வெட்டும் இடம், பொது சத்திரம், புதைகுழி:

இத்தகைய பகைமிகு இடங்கள் அருகில் தொழிற்சாலை, வியாபார நிலையம், தொழில் அலுவலகம் அமைக்கக் கூடாது.  இவற்றுக்கு எதிரிலும் இருப்பது இழைப்பைத் தரும்.

சிறந்த திசைகள்:

பொதுவாக தொழிற்சாலைகளுக்கும், வியாபார நிலையங்களுக்கும் வடக்கும், கிழக்கும் ஏற்ற திசைகளாகும். சிறப்பாக அமையும் திசைகள் தெற்கும், மேற்கும்.

இதில் மூல தெரு மேற்கு பக்கமுள்ள இடத்தில் வடக்கு முகமாகவும், தெற்கு பக்கமாக மூல தெருக்கள் அமைந்துள்ள இடத்தில் கிழக்கு பக்கமாகவும் கட்டுவது சிறப்பாகும். வடகிழக்கு மிகவும் சிறந்தது ஏற்றத்தை தரும். இரண்டு திசைகளும் நன்மை தருபவை. எதிர்மறையான பலனை தராது.

இரண்டாவதாக வட மேற்கு, தென் கிழக்கு திசைகளாகும். இதில் ஒன்று நேர்மறையான பலனும் மற்றது எதிர்மறையான பலனும் தருபவை. தென்மேற்கு திசைகள் இரண்டும் எதிர்மறையான பலன் தருவதால் நன்மை விளையாது.

வியாபாரம் செய்கிற இடம் சதுரம் அல்லது நீள் சதுரமாக அமைக்கலாம். கடையில் வைக்கும் கடவுள் படங்கள் கிழக்கு பார்த்து அமைக்கலாம்.

எதை எங்கு வைப்பது:

மின்சார பொருட்களை தென் கிழக்கை ஒட்டி அமைக்க வேண்டும். இவ்விதம் இருந்தால் வியாபாரம் பெருகும். பண வரவு அதிகரிக்கும்.

விளம்பரப் பலகையை தெற்கு, மேற்கு, தென் மேற்கு திசையில் வைப்பது வியாபாரம் பெருகும்.

வடகிழக்கில் தண்ணீர் பானை வைத்துக் கொள்ளலாம்.

தென்மேற்குப் பகுதியில் கடையை மேலான்மை செய்பவர் அமர்ந்து விபாராத்தைக் கவனிக்கலாம்.

பொருட்களை அடுக்கி வைக்கும் அமைப்பை வடகிழக்கில் வைக்க வேண்டாம்.

இவ்விதம் கடையின் - தொழிற்சாலையின் அமைப்பு இருந்தால், இரட்டிப்பு மடங்காக வருவாய் பெருகும்.



மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading