வீட்டின் மனை அளவை முடிவெடுக்க மனை விதி உதவுகிறது என்றால், வீட்டின் அறை அமைப்புகளுக்கு வாஸ்து விதி உள்ளது.
அதே போல, விட்டின் எந்த எந்த திசையில் என்ன அளவில், சாளரங்கள் அமைத்தால் செல்வம் வீட்டில் வந்து சேரும், வந்த செல்வம் தங்குமா? போன்றவற்றிற்கு சாளரம் அமைப்பதற்கான வாஸ்து விதி உள்ளது.
இந்த விதியின் படி, வீட்டின் வடக்கு திசையில் கண்டிப்பாக ஒரு சாளரம் அமைந்து இருக்க வேண்டும், அது எந்நேரமும் திறந்தே இருந்தால், வீட்டின் தலையானவரின் வருவாய் பெருகிக்கொண்டே இருக்கும்.
மேலும் இந்த வடக்கு திசை சாளரம் அமையப்பெறாத வீட்டில் குடியிருத்தலே ஒரு கேடு தான். செல்வம் என்ற ஒன்றே இல்லாது போகும்.
அடுத்து வருவது கிழக்கு திசை சாளரம். இந்த திசையில் சாளரம் இல்லை என்றால், வீட்டில் நோய், பிணி என ஒன்றன் பின் ஒன்றாக வந்து குடியேரும்,
வடக்கு சாளரம் அமையப்பெறாத வீடு ஆண்களுக்கு கேடு என்றால், கிழக்கு சாளரம் இல்லாத வீடு பெண்களுக்கு தீங்கு.
வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால், கிழக்கு திசை நோக்கிய சாளரம் இல்லாத வீட்டில் குடியிருக்க வேண்டாம்.
சாளரம் உள்ள வீட்டின் குடியிருப்பவர்கள், அதை திறந்து, காற்றோட்டம் இருக்கும் படி வைத்துக்கொள்ள வேண்டும்.
அப்படி இல்லாமல், அடைத்தே வைத்தால் அது சாளரம் இல்லாத வீட்டில் என்ன பலன் கொடுக்குமோ அத்தகைய பலனையே கொடுக்கும்.
பூச்சி, புளு, கொசு தொல்லை என்று சாளரத்தை திறக்க மறுப்பதற்கு பதில், கொசு வலை, பூச்சி வலையை சாளரத்திற்கு பொறுத்தி காற்றோட்டம் ஏற்படுத்துவது தான் சிறப்பான வாழ்வு வாழ ஒரே வழி.
மேலும், பல அறைகள் கொண்ட வீடாக இருப்பின், ஏதாவது ஒரு அறையிலாவது குறிப்பிட்ட திசையில் சாளரம் இருத்தல் வேண்டும். மேலும் அந்த அறைகளை பூட்டி வைக்கக்கூடாது.
சமையல் அறையில் கண்டிப்பாக வடக்கு நோக்கிய சாளரம் இருக்க வேண்டும். மேலும், மேற்கு திசையிலும் ஒன்று இருந்தால் மேலும் சிறப்பு.
வடக்கு மற்றும் கிழக்கு சாளரங்களை திறந்து வைக்க வேண்டும் என்று சொல்லும் விதி, தெற்கு மற்றும் மேற்கு திசை நோக்கி எதுவும் விளக்கம் சொல்ல வில்லை.
இருப்பினும், ஒரு வீடு என்று இருந்தால் அதற்கு நான்கு திசைகளிலும் சாளரம் அமைந்திருப்பது தான் நல்லது.