ADVERTISEMENT

வீட்டின் வாயு (காற்று) மூலை எது, அதில் என்ன அறை இருக்கலாம்?

வீட்டின் வாயு (காற்று) மூலை எது, அதில் என்ன அறை இருக்கலாம்? வீட்டின் வாயு (காற்று) மூலை எது, அதில் என்ன அறை இருக்கலாம்?

வாஸ்து சாத்திரம் என்கிற வீட்டு மனை விதியின் படி:

1. தென் மேற்கு மூலையை குபேர மூலை என்பர்.  இங்கு தலைமை படுக்கை அறை அமைத்து, செல்வத்தை சேமித்து வைக்க அடுக்குப்பலகை அமைக்கலாம்.
2. தென் கிழக்கு மூலையை நெருப்பு மூலை என்பர்.  இங்கு சமையல் அறை அமைக்கலாம். வண்டிகளை நிறுத்த இடம் அமைக்கலாம்.
3. வட கிழக்கு மூலையை ஈசானிய மூலை என்பர்.  இந்த மூலையில் கினறு, தரை நீர் தொட்டி, குழந்தைகளுக்கான படுக்கை அறை அமைக்கலாம்.
4.  வட மேற்கு திசையில் இருக்கும் மூலை காற்று மூலை என அழைக்கப்படுகிறது.

இந்த வட மேற்கு திசை மூலையில் என்ன அறைகள் அமைக்கலாம் என தெரிந்து கொள்வோம்.

தென் மேற்கு மூலை எந்தளவு சிறப்பு வாய்ந்ததோ அந்தளவு சிறப்பு வாய்ந்தது இந்த வட மேற்கு திசையின் கடைப்பகுதி.

ஆமாம், இது வீட்டில் குடியிறுப்பவர் பொருளாதாரத்தில் உயர்வான நிலைக்கு செல்வதையும், அறிவாற்றல் பெற்று சிறப்புடன் வாழ்வதையும் இந்த மூலையின் அமைப்பு முடிவு செய்கிறது.

இந்த காற்று மூலையில் சமையல் அறை அமைத்தால் சிறப்பு.  கழிவறை அமைக்கலாம்.  வீட்டின் குழந்தைகள் தங்குவதற்கான அறை இந்த மூலையில் அமைக்கக் கூடாது.  வந்து செல்லும் உறவினர்களுக்கு வேண்டுமானால் தங்கும் அறையை இந்த மூலையில் அமைக்கலாம்.

படிக்கட்டை இந்த மூலையில் தவருதலாகக் கூட கட்டிவிடக்கூடாது.  தண்ணீருக்கான தொட்டிகளும் இந்த மூலைக்கு ஆகவே ஆகாது.

வண்டிகளை இந்த மூலையில் நிறுத்தி வைக்கக்கூடாது.  வண்டிகளை நெருப்பு மூலையில் நிறுத்த வேண்டும்.

மேலும், வீட்டின் உயர்வான பகுதி தென் மேற்கு மூலையாக மட்டுமே இருத்தல் வேண்டும்.  வட மேற்கு மற்றும் வட கிழக்கு  வீட்டின் தாழ்வான பகுதியாக - உயரம் குன்றிய பகுதியாக இருக்க வேண்டும்.







மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading