ADVERTISEMENT

ஜாதக யோகம் அடிப்படை விளக்கம்

ஜாதக யோகம் அடிப்படை விளக்கம் ஜாதக யோகம் அடிப்படை விளக்கம்

நாம் ஐந்திறன் நாள்காட்டியில் (பஞ்சாங்கம்) கொடுக்கப்பட்டுள்ள யோகங்களையும், ஜாதகத்தில் கணிக்கப்படுகின்ற யோகங்களையும் ஒன்றுக்கு ஒன்றாக குழப்பிக் கொள்ளக்கூடாது.

கிழமைக்கும் விண்மீனுக்குமான தொடர்பு ஐந்திறன் நாள்காட்டியில் யோகம் என எடுத்துக் கொள்ளப்படுகிறது.  அதேவேளையில், ஜாதக யோகத்தை பொருத்தவரை, ஒரு கோளுக்கும் மற்ற கோள்களுக்கும் உள்ள தொடர்பு, அதாவது அவற்றின் பார்வை மற்றும் சேர்க்கை, ராசி கட்ட இருப்பிடத்தைப் பொறுத்து அமைகிறது.

ஐந்திறன் நாள்காட்டி யோகங்களை போலவே, ஜாதக யோகங்களில், நற்பலன் தரும் யோகம் மற்றும் தீய பலன் தரும் யோகம் என இருவேறு வகை யோகங்கள் உள்ளன. சில கோள்களின் தொடர்பு நல்லதாகவும் சிலவற்றின் தொடர்பு தீயதாகவும் இருக்கும்.

ஒருவரின் பிறந்த ஜாதக அமைப்பை வைத்து, அந்த ஜாதகருக்கு என்ன வகையான யோகங்கள் அமைந்திருக்கின்றன என்பதை ஆறு வகைகளில் பிரித்து பார்க்கலாம்.

1.  கோள்கள் ஒன்றுக்கொன்று அவற்றின் இருப்பிடத்தில், அதாவது, 1, 4, 7, 10ஆம் இடங்களில் இருந்தால் ஏற்படும் அமைப்பு.

2.  கோள்கள் ஒன்றுக்கு ஒன்று திரிகோணத்தில் அதாவது, 1, 5, 9 ஆம் இடங்களில் இருந்தால் ஏற்படும் அமைப்பு .

3.  கோள்கள் ஒன்றுக்கு ஒன்று நேருக்கு நேர், அதாவது 1 மற்றும் 7-மிடத்தில் இருந்தால் ஏற்படும் அமைப்பு.

4.  இரண்டுக்கும் மேற்பட்ட கோள்களின் சேர்க்கையினால் ஏற்படுவது.  அதாவது இரண்டுக்கும் மேற்பட்ட கோள்கள் ஒரே ராசி வீட்டில் இருப்பதால் ஏற்படும் அமைப்பு.

5.  கோள்களின் இடம் மாற்றத்தினால் ஏற்படுவது, அதாவது, ஒரு கோளுக்கு உரித்தான வீட்டில் மற்றொரு கோள் இருக்கும் அமைப்பு.

6.  ஒரு கோளுக்கு, முன்னும் பின்னும் அமையப்பெறும் கோள்களின் அமைப்பு. அதாவது, ஒரு கோளின் 1ம் மற்றும் 12ஆம் வீட்டில் கோள்கள் இருக்கும் அமைப்பு.

மேற்சொன்ன இவ்வாறான வகைகளில் கோள்களின் அமைப்பு இருந்தாலும், நற்பலன் மற்றும் தீய பலன் தரும் யோகம் அமைப்பு, தசா புத்தியில் தான் முழுமையாக அவற்றின் செயல்களை காட்டும்.

ஜாதக யோகங்கள் என்பவை மொத்தம் 300 வகைகள் உள்ளன.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading