ஜாதகத்தில் லக்கனத்தில் இருந்து 7 -ஆம் இடம் என்பது காதலையும், காதல் இரசனைகளையும், தாம்பத்திய சுகத்தையும் குறிக்கும்.
இந்த 7 -ஆம் இடம் தவிர 8 ஆம் இடம் காதல் உணர்வுகளின் இருப்பிடம்.
ஒரே வரியில் யாருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்டாட்டி அமைவார்கள் என்றால் ‘ஜாதகத்தில் லக்கனத்தில் இருந்து 7 ஆம் இடத்தில் எத்தனை சுப கோள்கள் உண்டோ அத்தனை பெண்டாட்டி என எடுத்துக் கொள்ளலாம்.’
சுப கோள்கள்: வியாழன், வெள்ளி, அறிவன் (புதன்)
வெள்ளி (சுக்கிரன்) இரட்டை இராசியில் அமைந்து, அந்த வீட்டிற்கான இறைவன் உச்சம் பெற்று 7 ஆம் இடத்தின் இறைவன் ஆட்சி பெற்று இருந்தால் இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட பெண்டாட்டி அமையப்பெற்ற ஜாதகம் என கொள்ளலாம்.
பெண் இராசிகள் ஆறும் இரட்டை இராசிகள் என கணக்கிடப்படுகிறது.
லக்கனத்தில் இருந்து 7 ஆம் இத்தில் இறைவன் கெட்டு, கெட்டவர்கள் வீட்டில் அமையப் பெற்றால் இரண்டு பெண்டாட்டி அமையும்.
லக்கனத்தில் இருந்து 7 ஆம் வீட்டின் இறைவன் ராகுவுடன் சேர்க்கை பெற்றால் இரண்டு பெண்டாட்டி அமையும்.
லக்கனத்தில் இருந்து 7 ஆம் இடத்தில் செவ்வாய் அல்லது காரி (சனி) இருந்தால் இரண்டு பெண்டாட்டி அமையும்.
செவ்வாய் மற்றும் காரி (சனி) இவை இரண்டும் லக்கனத்தில் இருந்து 2 ஆம் இடத்தில் அமைந்தால் இரண்டு பெண்டாட்டி அமையும்.
லக்கனத்தில் இருந்து 7 ஆம் வீட்டின் இறைவன் 10 ஆம் இடத்து இறைவனால் பாக்கப்பட்டால் இரண்டு பெண்டாட்டி அமையும்.
லக்கனத்தில் இருந்து 11 ஆம் வீட்டில் இரண்டு வலிமையான கோள்கள் அமையப் பெற்று இருந்தால் இரண்டு பெண்டாட்டி அமையும்.
லக்கனத்தில் இருந்து 7 ஆம் வீட்டின் இறைவனுடன் வெள்ளியும் (சுக்கிரன்) இணைந்து இருந்தால் இரண்டு பெண்டாட்டி அமையும்.
லக்கனத்தில் இருந்து 7 ஆம் வீட்டின் இறைவன் கெட்டு 11 ல் இரு கோள்கள் அமையப் பெற்றிருந்தால் இரண்டு பெண்டாட்டி அமையும்.
லக்கனத்தில் இருந்து 7 ஆம் இடத்தில் வெள்ளி (சுக்கிரன்) மற்றும் காரி (சனி) இணைந்து இருந்தால் இரண்டு பெண்டாட்டி அமையும்.