வியாழன் தசையில், முதலில் துவங்குவது வியாழன் புக்தி. அதை தொடர்ந்து காரி, அறிவன் என புக்தி ஒவ்வொன்றாக வந்து போகும்.
வியாழன் தசையில் புக்திகளில் நேர அளவு:
வியாழன் 2 ஆண்டு 1 திங்கள் 18 நாள்
காரி 2 ஆண்டு 6 திங்கள் 12 நாள்
அறிவன் 2 ஆண்டு 3 திங்கள் 6 நாள்
கேது 11 திங்கள் 6 நாள்
வெள்ளி 2 ஆண்டு 8 திங்கள்
ஞாயிறு 9 திங்கள் 18 நாள்
நிலவு 1 ஆண்டு 4 திங்கள்
செவ்வாய் 11 திங்கள் 6 நாள்
இராகு 2 ஆண்டு 4 திஙள் 24 நாள்
1. வியாழன் புக்தி: பொருள் சேர்க்கை, நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், அரசால் வருவாய், செல்வம் என மகிழ்வான நேரமிது
2. காரி புக்தி: வண்டி வாங்குவீர்கள். வீட்டிற்கான பொருட்களை வாங்குவீர்கள். துன்பம் வந்தாலும் தாமாக ஓடி விடும்.
3. அறிவன் புக்தி: வருவாய் பெருகும். ஆடல் பாடல் என மகிழ்ச்சி கிட்டும். அறிவு திறன் பெருகும். செல்வம் சேரும். பெருமையும், புகழும் கிட்டும்.
4. கேது புக்தி: உலகம் சுற்றம் நேரமிது. அலைச்சலால் உடல் சோர்வு உண்டாகும். இடம் பெயறுதல் என்பது தவிர்க்க இயலாதது.
5. வெள்ளி புக்தி: வீட்டில் ஆடு, கோழி, மாடு என எண்ணிக்கை பெருகும். உடைகள், நகைகள், வீட்டிற்கான பொருட்கள் என சேர்ப்பீர்கள். நிலம் வாங்குவீர்கள். மகிழ்விற்கான நேரமிது.
6. ஞாயிறு புக்தி: நன்மைகள் மட்டும் கிடைக்கும். நினைபெதெல்லாம் நடந்தேறும். நோய் நீங்கும். பகை வரும், ஆனால் அது நன்மையே.
7. நிலவு புக்தி: முத்து, பவளம், வெள்ளி, தங்கம், திருமணம், பொருள் சேர்க்கை, அறிவு, பிள்ளை பேறு, என எல்லா நல்ல செயல்களும் நடக்கும். கடவுள் நம்பிக்கை நலம் தரும்.
8. செவ்வாய் புக்தி: நினைப்பதெல்லாம் முடித்துவிடலாம். நெருப்பால் தீங்கு வரும். நோய் நொடிகள் வந்து விலகும். புற்றார் பகை நன்மையில் முடியும்.
9. இராகு புக்தி: நீதிமன்றம் நாடிச்செல்லும் நிலை வரும். பகை உண்டாகும். வாழ்க்கை துணையுடன் அமைதியாக வாழ பழகுங்கள். பொருள் சேதம் உண்டாகலாம்.