ஞாயிறு தசை நடைபெறுகிறது என்றால் முதலில் துவங்குவது ஞாயிறு புக்தி. தொடர்ந்து நிலவு, செவ்வாய் என புக்தி ஒவ்வொன்றாக வந்து போகும்.
ஞாயிறு தசையில் புக்திகளில் நேர அளவு:
1 ஞாயிறு 3 திங்களும் 18 நாட்களும்
2. நிலவு 6 திங்கள்
3. செவ்வாய் 4 திங்களும் 6 நாட்களும்
4. இராகு 10 திங்களும் 24 நாட்களும்
5. வியாழன் 9 திங்களும் 18 நாட்களும்
6. காரி (சனி) 11 திங்களும் 12 நாட்களும்
7. அறிவன் (புதன்) 10 திங்களும் 6 நாட்களும்
8. கேது 4 திங்களும் 6 நாட்களும்
9. வெள்ளி (சுக்) 1 ஆண்டு
ஆக மொத்தம் 6 ஆண்டுகள்.
தசா புக்தி பலன்கள்:
1. ஞாயிறு புக்தி : கருவிற்கு கேடும், உறவு முறைகளுக்கு கேடும், மன அழற்சியும், பீடையும், மன அழுத்தமும், வலது பக்க உடலில் வலியுடன் கூடிய பாதிப்பும், தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். சித்திரை திங்களில் இந்த புக்தி நடைபெறுகிறது என்றால், பாதிப்பு மிக கொடூரமாக இருக்கும்.
2. நிலவு புக்தி: ஆட்சி செய்பவர்களால் நல்ல பலன் கிடைக்கும். வருவாய் பெருகும். வண்டி வாங்குதல், திருமண நிகழ்ச்சி என மகிழ்வான செயல்கள் நடைபெறும். ஆடி திங்களில் இந்த புக்தி நடைபெறுகிறது என்றால், தீங்கு பல வந்து சேறும். உடலின் இடது பக்கத்தில் நோய் உண்டாகும்.
3. செவ்வாய் புக்தி: நோய் உண்டாகும். சண்டை சச்சரவு நாம் வேண்டாம் என்றாலும் வந்து சேறும். நெருப்பு தொடர்பான வேலைகளில் ஒதுங்கிக் கொள்வது நல்லது. செல்வம் அழியும். நிலத்தில் முதலீடுகள் செய்து அதில் வருவாய் ஈட்ட முயன்றால் அது இழப்பில் விடும்.
4. இராகு புக்தி: பிள்ளைகளால் மனம் வேதனை அடையும். உடன் பிறந்தவர்களிடம் பகை உண்டாகும். கணவன் மணைவியிடையே தேவையற்ற மனத்தாங்கல்கள் உண்டாகும்.
5. வியாழன் புக்தி: கல்வியில் சிறந்த நிலை ஏற்படும். வருவாய் பெருகும். மகிழ்வான வாழ்வு அமையும். அரசிடம் இருந்து நல்ல செய்திகள் வந்தவன்னம் இருக்கும். பிள்ளைகளால் மகிழ்சி கிட்டும். நல்லூழ் கிட்டும்.
6. காரி புக்தி: அச்சம், தந்தையிடம் பகை, மனதில் துன்பம் என வந்து சேறும். செல்வம் அழியும். உடல் நோய்கள் பல வந்து போகும். கவலை உண்டாகும். மன அழுத்தம் ஏற்படும்.
7. அறிவன் புக்தி: அக்கம் பக்கத்தில் வாழ்வோரிடம் தேவையற்ற பகை உண்டாகும். மனதில் அமைதி இல்லாத நிலை ஏற்படும். அரசு தண்டிக்கும். மன அழுத்தம் ஏற்படும்.
8. கேது புக்தி: நெடும் பயணம் மேற்கொள்ள இது சரியான நேரம். குடியிறுப்பை மாற்றுவீர்கள். பெருமளவு நல்ல பலன் எதுவும் இந்த நாட்களில் கிடைக்காது.
9. வெள்ளி புக்தி: திருமணம் நடைபெறும். செல்வம் சேறும். வருவாய் பெருகும். பொன் கிடைக்கும். நோய்கள் நீங்கும். மகிழ்ச்சி கிட்டும்.