குரு சந்திர யோகம்
வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம்.
இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது.
உங்கள் ஜாதகத்தில் நிலவு இருக்கும் இடத்தை ஒன்று என வைத்து துவங்கி எண்ணினால். அதிலிருந்து 5 ஆம் இடம் அல்லது 9 ஆம் இடம் என இதில் ஏதாவதொரு இடத்தில் வியாழன் இருந்தால் அது தான் குரு சந்திர யோகம் ஆகும்.
வியாழனும் , நிலவும் சேர்ந்து இருந்தாலும் அந்த வீட்டின் உரிமையாளர் பலம் இழப்பின் குரு சந்திர யோகம் பலன் தராது.
குரு சந்திர யோகமானது அதன் திசை நடைபெறும் நேரங்களில் மட்டும் பலன் தருகிறது.
குரு திசையில் சந்திர புத்தியிலோ அல்லது சந்திர திசை குரு புத்தியிலோ மிகுந்த பலன்களை தருகிறது.
இந்த யோகம் உள்ளவர்கள் தமது முயற்சி என்று எதுவும் இல்லாமலேயே பல வெற்றிகளை காண்பார்கள். இவர்கள் தாம்மை அறியாமல் பல தோல்விகளை தகர்த்து எறிவார்கள்.