ADVERTISEMENT

ஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன?

ஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன? ஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன?

ஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன?

ஸ்திரி என்ற வடமொழி சொல்லிற்கு பெண் என்பது பொருள். தீர்க்கம் என்றால் திமிழில் இறுதியான அல்லது முழுமையான என்று பொருள் கொள்ளலாம்.

ஸ்திரி தீர்க்கம் என்றால், பெண் முழுமையாக (அனைத்து செல்வங்களுடன்) எந்த நிலையில் ஆணுடன் கூடி வாழ்வாள் என்பதை கணிப்பது.

திருமண பொருத்தம் என்றாலே பெண் திருமணத்திற்கு பின் எவ்வாறு வாழ்வாள் என்பதை குறித்து கணிப்பது தான்.

பெண் சிறப்பாக ஆணுடன் கூடி வாழ வேண்டும் என்பதை கணிப்பதற்காக மட்டுமே இந்த திருமண பொருத்தத்தை சோதிடத்தில் வைத்துள்ளனர்.

இந்த ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்பது பெண்ணின் ஆயுள் மற்றும் உடல் நலம் ஆணின் விண்மீன் தொடர்பால் எவ்விதம் மாறுபாடு ஏற்படுகிறது என்பதை சொல்லும் பொருத்தம் ஆகும்.

இந்த பொருத்தம் பார்ப்பதற்கான எளிய முறை என்னவென்றால், பெண் விண்மீனில் இருந்து ஆணின் விண்மீன் 7 இடங்களுக்கு அப்பால் இருக்க வேண்டும்.

எவ்வளவிற்கு எவ்வளவு தள்ளி இருக்கிறதோ அவ்வளவு நல்ல பொருத்தம் இருப்பதாக கொள்ளலாம்.

அதாவது, பெண்ணின் விண்மீனிற்கு அடுத்த விண்மீன் முதல் 7 நிலைகளில் உள்ள விண்மீன்கள் பொருந்த வில்லை என கணக்கிட வேண்டும்,

8 ஆம் நிலையில் இருந்து 14 ஆம் நிலை வரை ஓரளவு பொருந்துகிறது என்றும் அதை தாண்டிய நிலையில் உள்ளவை நன்றாக பொருந்துகிறது என எடுத்துக்கொள்ளவு,

இந்த பொருத்த இருந்தால், பெண்ணிற்கு நீண்ட ஆயுள் அமையும். மேலும், உடல் நலன் சிறந்து விளங்கும்.

செல்வ செழிப்புடன், நிறைவான மனதுடன் பெண் வாழ வேண்டும் என்றால், இந்த பொருத்தம் பார்ப்பது சிறப்பு.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading