ADVERTISEMENT

கோள்களும் அவற்றின் பார்வைகளும்

கோள்களும் அவற்றின் பார்வைகளும் கோள்களும் அவற்றின் பார்வைகளும்

"பார்வை" என்கிற சொல்லின் பொருளுக்கு நம் வாழ்நாளில் கொடுக்கும் தலைமைத்துவம் பெரிதானது.  எடுத்துக்காட்டாக, கண் பட்டுவிட்டது, பார்வையே சரியில்லை, பார்வை பட்டுவிட்டது, கண்ணில் படவே கூடாது, என பல்வேறு விதத்தில் ஒரு உடன் வாழும் மனிதனின் பார்வை குறித்து அத்தனை அக்கறை கொள்கிறோம். 

அப்படியானால் ஜோதிடத்தில் கோள்களின் பார்வை எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்!  ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஜோதிடரும் அது வீற்றிருக்கும் வீட்டிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் உள்ள ராசி வீடுகளைப் பார்க்கும்.  ஒவ்வொருவரு கோளுக்கும் தனித்தனியாக இத்தகைய பார்க்கும் திறன் உள்ளது.  

கோள்களின் பார்க்கும் திறன் குறித்து கணித்த நம் ஜோதிட முன்னோர்கள்,  ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொள்கின்றனர்.  எடுத்துக்காட்டாக வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகியவற்றிற்கு 7ம் பார்வை மட்டுமே உண்டு என பொதுவாக ஆரூடத்தின் பழைய நூல்கள் கூறினாலும், ஜோதிடம் கணிப்பவர்கள் பலர் வெள்ளியை பொருத்தவரை 6 - 7 - 8 ஆகிய வீடுகளைப் பார்க்கும் திறன் உள்ளது என்றும், ஞாயிறை பொருத்தவரை 3 - 7 - 10 ஆகிய வீடுகளைப் பார்க்கும் திறன் உள்ளது எனவும் முரண்பட்டுக் கொள்கின்றனர். ராகு மற்றும் கேது -வைப் பொறுத்தவரை 3 மற்றும் 11 ஆம் பார்வை உள்ளது என்பதும் முரண்பட்ட கருத்து.

ஆருடநூல்களில் ஒரு பழமையான வடமொழி கலந்த தமிழ் நூல், இவ்வாறாக  ஒரு பாடலை கொண்டுள்ளது: 


"இரவி மதி மால் பாம்பு வெள்ளியு மேழை நோக்கும் 
பரவிய செவ்வாய் நான்கேழ் எட்டது பார்வை யாகும் 
குருதனக் கைந்தொன்பானேழ் கூறுநற் பார்வையாகும்
தருகிய சனி மூன்றேழுந் தசமது பார்வையாகும்" 


மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடல் எந்த நூலில் இருந்து எடுத்து வழங்கப்பட்டது என்பதை எந்த ஆருடநூல் ஆசிரியரும் குறிப்பிடுவதில்லை. 

இந்தப் பாடலில் கொடுக்கப்பட்டுள்ள கருத்தின்படி: 

ஞாயிறு, திங்கள், அறிவன் (புத), வெள்ளி, ராகு, கேது ஆகிய கோள்களுக்கு 7ம் பார்வை மட்டுமே உள்ளது. 

செவ்வாய் 4, 7, 8ம் பார்வையை மட்டும் கொண்டுள்ளது. 

வியாழன் 5, 7, 9ம் பார்வையை மட்டும் கொண்டுள்ளது. 

காரி (சனி) 3, 7, 10ம் பார்வையை மட்டும் கொண்டுள்ளது. 

கோள்களின் பார்வை குறித்து முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதால், ஆருடம் கணிப்பவர்கள், அவரவர் முன் அனுபவம் கொண்டு இதை கணக்கிடல் வேண்டும்.



Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading