ADVERTISEMENT

வெளிநாட்டில் போய் வாழ்வேனா?

வெளிநாட்டில் போய் வாழ்வேனா? வெளிநாட்டில் போய் வாழ்வேனா?

வெளிநாட்டில் போய் வாழ வேண்டும், ஊர் நிறைய செல்வம் சேர்க்க வேண்டும் என்பது பெரும்பாலோரின் கணவு.

போட்டிகள் நிறைந்த இன்றைய பாரில், எந்த வகையிலாவது செல்வம் மற்றும் வாழ்வு வாழும் முறையில் முன்னேறிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு மனிதர்கள் யாவரும் தமது உழைப்பையும் ஆற்றலையும் செலவிடுகின்றனர்.

நம்முடைய வாழ்க்கை செல்வ செழிப்பாக அமைய, கல்வி, பொருளாதார முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைக்கிறோம்.

இராசிக்காரர்களில் சிலர், உயிர் வாழ வேண்டும் என்றால் ஏதாவது பிழைப்பு பிழைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாய சூழலில் பிறந்த ஊரை விட்டு வெளியூர் சென்று கடுமையாக பாடுபடுகின்றனர்.

சிலர் சொற்ப வருவாய்க்காக வெளிநாடுகளுக்குச் சென்று கடும் உழைப்பு உழைக்கின்றனர்.

அதேநேரம், ஒரு சில இராசிக்காரர்கள், வேண்டாம் என்று நினைத்தாலும் அவர்களுக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டுக்குச் செல்வதற்கான யோகம் அமைகிறது.  

அத்தகையவர்கள், பெரும் உடல் உழைப்போ அல்லது ஆற்றலோ செலவிடாமல், உயர் பொருப்புக்கள், பெரிய வருவாய், ஊரில் மரியாதை என தானாக எல்லாம் அவர்களுக்கு கைகூடுகிறது.

இன்னும் சில யோக இராசிக்காரர்களுக்கு, தன் ஊரை விட்டு செல்லா விட்டாலும், தொழில் வாய்ப்புகள் பார் முழுதும் இருந்து அவர்களை தாமாக தேடி வந்து செல்வ செழிப்பை அள்ளி கொடுக்கிறது.

ஆருடம் கணிக்கும் முறையில், யார் யாருக்கு இத்தகைய, நோகாமல் வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று பெரும் செல்வம் ஈட்டும் யோகம் அமையும் என்று பார்ப்போம்.

முதலில், வெளியூர் செல்லும் வாய்ப்பு யாருக்கு, எங்கும் குடி பெயராமல் வெளிநாட்டு யோகம் யாருக்கு என பார்க்கலாம்:

ஒருவரின் பிறந்த சாதகத்தில் பிறப்பு லக்னத்துக்கு 3, 6-ம் வீடுகள் வெளியூர் யோகத்தை அறிவதற்கும், 9, 12-ம் வீடுகள் வெளிநாடு யோகத்தைப் பற்றி அறிவதற்கும் உதவியாக இருக்கின்றன.

ஒருவரின் பிறப்பு சாதகத்தில் 9 மற்றும் 12-ம் வீட்டுக்குரிய அதிபதிகள் பலம் பெற்றோ, பரிவர்த்தனை பெற்றோ, ஒருவருக்கு ஒருவர் பார்வை பெற்றோ, இருவரும் இணைந்து 9 அல்லது 12-ம் வீட்டில் அமைந்திருந்தாலோ, அந்த சாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டாம்.

பயணங்களுக்கு அடிப்படையான நிலவு பலம் பெற்று, 9 மற்றும் 12-ம் வீட்டு அதிபதிகளும் பலம் பெற்றிருந்தால், அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று வரும் அமைப்பு, பயணங்களால் அனுகூலம், வருவாய் ஈட்டும் யோகம் ஆகியவை ஏற்படும்.

மேலும் 9, 12-ம் வீட்டு அதிபதிகளுடன் 10-ம் வீட்டு அதிபதி இணைவது அற்புதமான அரசயோகமாகும்.

இதனால் வெளியூர், வெளி நாட்டுத் தொடர்புடைய தொழில்கள் மூலம் வருவாய் ஈட்டக்கூடிய அமைப்பு உண்டாகும்.

9, 12-ம் வீட்டுக்கு அதிபதிகள் இணைந்து, நீர் ராசிகள் எனக் கூறப்படும் கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவற்றில் அமையப்பெற்றால் வெளி நாடுகளுக்குச் சென்று வருவாய் ஈட்டக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

3, 6-ம் வீட்டில் உள்ள கோள்களின்  தசை ஊழிகளில் வெளியூர் யோகமும் 9, 12-ம் வீட்டில் உள்ள கோள்களின் தசை ஊழியில் வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும் வாய்ப்பு உண்டு.

9, 12-ம் வீட்டுக்கு அதிபதிகள் பலம் பெற்றிருந்து 9 அல்லது 12-ம் வீட்டில் காரி (சனி) அல்லது ராகு அமையப்பெற்று, அப்படி அமையும் கோள்களின் தசை ஊழிகள் நடைபெற்றாலும் கடல் கடந்து செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

9, 12-ம் வீட்டு அதிபதிகளுடன் காரி அல்லது ராகு இணைந்து அந்தக் கோள்களின் தசை ஊழி நடைபெற்றாலும், 9, 12-ம் வீட்டுக்கு அதிபதிகள் பலம் பெற்றிருந்து, ஊழி தத்துவப்படி 9, 12-ம் வீடுகளான தனுசு மற்றும் மீனத்தில் கோள்கள் அமைந்து அவற்றின் தசை ஊழி நடைபெற்றாலும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய தொழிலில் வருவாய் ஈட்டும் யோகத்தை பெற்றிருப்பார்.

ஒருவருக்குச் நிலவு தசை அல்லது புக்தி நடைபெற்றால், தொழில் வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பு அமையும்.

வெளிநாட்டில் குடியேறும் யோகம்


வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய யோகங்கள் இருந்தாலும் அந்த யோகத்தை ஏற்படுத்தக்கூடிய தசாபுக்தி நடைபெறுவது அடிப்படையாகும்.

இந்த தசாபுக்தி ஊழிகளில் கோள்கள் பெயற்சி ரீதியாக வியாழன் அல்லது காரி போன்ற கோள்களின் பெயற்சியும் வாட்டால அமைந்தால் சிறப்பான வருமானத்தை ஈட்ட முடியும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading