ADVERTISEMENT

தாய் தந்தை உயிரை பறிக்குமா பிறந்த குழந்தையின் சாதக அமைப்பு?

தாய் தந்தை உயிரை பறிக்குமா பிறந்த குழந்தையின் சாதக அமைப்பு? தாய் தந்தை உயிரை பறிக்குமா பிறந்த குழந்தையின் சாதக அமைப்பு?

பொதுவாக குழந்தை பிறந்த நேரத்தில் தாய் அல்லது அதன் தந்தை அல்லது உறவினர் யாராவது இறந்தால், குழந்தை பிறந்த நேரம், உயிரை பறித்து விட்டது என உடனடியாக குழந்தையின் சாதக அமைப்பின் மீது குற்றம் சாட்டுவதை நாமே செய்திருப்போம் அல்லது பிறர் செய்வதை வேடிக்கை பார்த்து நாமும் அதை உண்மை என நம்பி இருந்திருப்போம்.

அப்படியானால் ஒரு உயிரின் சாதகத்தால் மற்றொரு உயிரை பரிக்க இயலாது.  இதை தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் மண்ணில் தோன்றிய ஆசீவகம் வழிபாடும், வடக்கே தோன்றி தமிழகத்தில் செழித்த சைன (சமணர்) வழிபாட்டு முறைகளும், பெளத்த வழிபாட்டு முறைகளும்  சொல்கின்றன.

அதாவது நம் மூதாதையரின் வழிபாட்டு முறைகளின் படி பிறவி பயனும், ஆயுளும் முழுக்க முழுக்க மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரின் முற்பிறப்பு விணையால் மற்றும் வாழும் வாழ்கையில் அந்த உயிர் ஈடுபடும் நல்லவை கெட்டவை ஆகியவற்றால் ஏற்படுகிறதே தவிர, பிற உயிர்களால்  ஒருவரது வாழ்க்கையை கட்டுப்படுத்த இயலாது.

சோதிடம் என்ன சொல்கிறது என பார்க்கலாம்.  சோதிடத்தில், ஒருவரின் சாதக கட்டத்தில், ஒன்பதாவது வீடு தந்தை மற்றும் ஐந்தாவது வீடு குழந்தை அமைப்புகளையும் குறிப்பிடும்.  இதில் ஞாயிறு கோளின் இருப்பிடத்தை தந்தை எனவும், வியாழன் கோளின் இருப்பிடத்தை குழந்தை எனவும் குறிப்பிடுவர்.

ஞாயிறு கோள் இருபுறம் பாவ கோள்கள் சூழ; ஞாயிறை பாவ கோள்களும் பார்வையிட்டால், ஜாதகன் கருவில் இருக்கும்பொழுது அவனுடைய தந்தையின்  உயிருக்கு தீயவை ஏற்படும்.

லக்கினத்தில் பாவ கோள்களான காரி (சனி), ஜ்னாயிறு, திங்கள் ஒன்றாக அமர்ந்திருக்க ஐந்தாமிடத்தில் செவ்வாய் நின்றிக்க தந்தைக்கு உயிருக்கு நல்லதல்ல மற்றும் செவ்வாய், கேது மற்றும் ஞாயிறு ஆகிய மூவரும் ஒரே ராசியில் கூடி நன்மை தரும் கோள்களின் பார்வை பெறாமல் இருந்தால் ஜாதகர் பிறந்த சிறிது ஆண்டுகளில் தந்தையின் உயிருக்கு தீங்கு எனலாம்.

ஐந்துக்கும் ஒன்பதிக்குடையவனும் ஞாயிறுடன் சேர்ந்து இருக்க இவர்களை காரி (சனி) பார்க்க தந்தைக்கு தீங்கு எனலாம்.

ஞாயிறுடன் 5, 9க்கு உடையவர்கள் சேர்ந்து அமர்ந்து இவர்களுடன் செவ்வாய் காரி (சனி) கூடி மூன்றாமிடத்தில் நின்றால் ஜாதகர் பிறந்தவுடன் தந்தைக்கு பெரும் தீன்கு என்று கூறப்படுகிறது.

ஒன்பதிற்கு உடையவனின் இடத்தில் இருந்து குளிகன் அல்லது மாந்தி இடத்தை கழிக்கும்பொழுது எந்த ராசிக்கு வருகிறதோ அந்த ராசியில் வியாழன் பெயற்ச்சி அடந்து இருக்குமேயானால் அடுத்த ஓராண்டில் தந்தைக்கு தீங்கு நிகழ வாய்ப்புண்டு.

இராசியில் இருந்து 9-குடையவர் இடத்தை கழிக்கும்பொழுது எந்த ராசி வருகிறது என்று பார்க்கவேண்டும். அந்த ராசியில் ஞாயிறு இருக்கும் நாட்கள் தந்தைக்கு தீங்கு எனலாம்.

8, 9, 10 ஆகிய மூன்றிலும் தீய கோள்கள் நிற்க, ஒன்பதுகுடையன் மறைவிடத்தில் திறன் குன்றி அமர்ந்திருக்க, இந்த அமைப்பில் ஒன்பதாமிடத்தில் செவ்வாய் அலொலது -ஞாயிறு நின்றிருந்தாலும் அல்லது வேறு எந்த தீய கோள்கள் நின்றாலும் ஜாதகனின் தந்தைக்கு தீங்கு எனலாம்.

லக்னத்தின் ஒன்றாமிடத்தில் செவ்வாய்; ஒன்பதில் காரி நின்றிருந்தால் தீங்கு.

அதுதவிர 9-க்குடையவருடன் செவ்வாய் மற்றும் காரியுடன் (சனி) சேர்ந்திருக்க நல்ல கோள் உதவினாலும் தந்தைக்கு தீன்கு ஏற்படலாம்.

ஒன்பதாமிடத்தில் செவ்வாய், காரி (சனி) பார்வை இருந்தால் ஞாயிரான தந்தை மறைவிடம் மற்றும் நொடிப்பின் இடம் என்று சொல்லும் பன்னிரண்டாம் உரிமையாளரான ஞாயிறு பாதிக்கப்பட்டால் ஜாதகரின் சிறுவயதில் தந்தைக்கு தீங்கு.

ஞாயிறு மற்றும் காரி அதோடு 9-க்குடையவன் இணைந்து இருந்தால் தந்தைக்கு.

இவற்றில் இந்த மூவரையும் வியாழன் பார்க்க, 5-க்குடையவன் உச்சமானால் தந்தைக்கு தீங்கு ஏற்பட வாய்ப்புகள் குறைவு

மூதாதையரின் 9-க்குடையனாகவும் காரி தீயவர்களுடன் சேர்ந்து 4, 6, 8 அமர்ந்திருக்க, 9-ல் கேது இருக்க, அந்த ஒன்பதாமிடத்தில் காரி பெயற்சியில் வீற்றிருக்கும் ஆண்டுகள் தந்தைக்கு தீங்கு ஏற்படும்.

குறிப்பு: ஒரு சாதகத்தின் பலன் கணிக்கும் பொழுது, அவரின் மனைவி, மாமன், கணவர், உடன் பிறந்தோர், தாய் தந்தை, பிற பிள்ளைகள் என அவர்களது சாதகங்களையும் சற்று உற்று நோக்க வேண்டும்.

மேலும் தசா புக்தி பலன்களையும் பார்க்க வேண்டும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading