ADVERTISEMENT

விருச்சிகம் லக்னமும், தொழில் மற்றும் வருவாய் அமைப்பும்

விருச்சிகம் லக்னமும், தொழில் மற்றும் வருவாய் அமைப்பும் விருச்சிகம் லக்னமும், தொழில் மற்றும் வருவாய் அமைப்பும்

விருச்சிக லக்னகாரர்களுக்கு, தொழில் மற்றும் வருவாய்க்கான உரிமையாளராக  செவ்வாய் இருந்தாலும், 10 -ம் வீட்டின் உரிமையாளராக இருப்பவர், ஒன்பது கோள்களுக்கும் நடுநாயகமாக தலைமையேற்று வீற்றிருக்கும் ஞாயிறு ஆவார்! இத்தகைய உயரிய பெருமைக்குரியவர்கள் விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்கள் மட்டுமே!

ஞாயிறு ஆட்சி உயர்வு பெற்று, லக்னத்தின் உரிமையாளரான செவ்வாயுடன் சேர்க்கை ஏற்பட்டு அங்கே வியாழனின் பார்வையும் பெற்றால் அல்லது நட்பு கோள்களான செவ்வாய் - நிலவு - வியாழன் போன்றவர்களின் வீடுகளில் வீற்றுருந்தாலும், அந்த ஜாதகக்காரர் சமூகத்தில் உயர்வான பதவிகளை வகிக்கக்கூடிய நிலை கொண்டிருப்பார். சிலர் அரசியல் அல்லது அரசு அல்லது அரசு சார்ந்த பணிகளில், பிறரை ஆட்சி செய்யத் தக்க வேலைகளில் இருப்பர்.

ஞாயிறு, வியாழன் அல்லது செவ்வாயுடன் சேர்க்கை பெற்று, திரிகோண அமைப்பில் வலுப் பெற்று அமைந்திருந்தாலும் மேற்கூறிய நற்பலன்களை அடைய முடியும்.

10 -ம் வீட்டில் வெள்ளி மற்றும் நிலவு சேர்ந்து இருந்தால் அல்லது ஞாயிறு, வெள்ளி, நிலவு போன்ற நட்பு கோள்களின் சேர்க்கை 9, 10, 12ஆம் வீடுகளில் அமையப் பெற்றிருந்தால், கடல் கடந்து பிற நாடுகளுக்குச் சென்று வருவாய் ஈட்டும் வாய்ப்பு அமையும்.

ஞாயிறு வெள்ளியுடன் சேர்க்கைப் பெற்று 10 -ல் அமைந்து, அங்கே வியாழன் பார்வையும் பெற்றால் கூட்டுத் தொழில் சிறப்பாக அமைந்து செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.

வெள்ளி 10 -ல் அமைந்தால், ஆடை, அணிகலன், கலைத்துறை, மற்றும் பெண்கள் பொதுவாக பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி அல்லது விற்பனை அல்லது ஊக்குவித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டால் சிறந்த வருவாய் கிடைக்கும்.

ஞாயிறு அறிவனுடன் சேர்க்கை மற்றும் வியாழனின் பார்வை பெற்று 10 -ல் அமர்ந்தால், பட்டயக் கணக்காளர், கணக்காளர், விற்பனைத் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு பெரும் செல்வம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும்.

ஞாயிறு செவ்வாயுடன் சேர்க்கை பெற்று வலுப்பெற்றால், ஆளுமை திறன் பெருமளவில் கொண்டவராக, பிறரை ஆட்சி செய்பவராக, நிலம் தொடர்பான தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவராக ஜாதகரின் வருவாய் ஈட்டும் அமைப்பு அமையும்.

ஞாயிறு செவ்வாயுடன் சேர்க்கை பெற்று காரி (சனி), ஆட்சியில் உயர்வு நிலை பெற்றால், அரசியலில் வெற்றியாளராக ஜாதகர் வலம் வருவார்.

ஞாயிறு, நிலவு - செவ்வாய் - கேது போன்ற கோள்களின் சேர்க்கை பெற்றிருந்தால், ஜாதகர் மருத்துவத்துறையில் பல சிறப்பான வெற்றிகளை ஈட்டுவார்.

வியாழன் அறிவனுடன் இணைந்து, 10 -ம் வீட்டில் அமர்ந்தால், பேச்சுத் திறமை கொண்டவராக விளங்குவார்.  அந்தத் திறமையைக் கொண்டு ஜாதகர் செல்வச் செழிப்பான வாழ்க்கை கொண்டிருப்பார்.

ஞாயிறு திரிகோணங்களில் அமைந்து நல்ல கோள்களின் பார்வை பெற்றால் செல்வத்தைச் சேர்த்து வைக்க இடம் இல்லை என்கிற அளவிற்கு செல்வம் குவியும்.

ஞாயிறு அதன் பகை கோள்களான காரி அல்லது ராகு ஆகியவற்றுடன் சேர்க்கை பெற்றால், ஜாதகர் சட்டத்திற்கு எதிரான தொழில்களை செய்து அதன்மூலம் வருவாய் ஈட்டும் கீழ்த்தரமான நிலை ஏற்படும்.

காரி அல்லது ராகு ஆகியவற்றுடன் ஞாயிறு, 8 அல்லது 12 ஆகிய மறைவிடங்களில் அமைந்தால், ஜாதகர் நிலையற்ற வருவாயுடன் வாழ்க்கையை நடத்தும் நிலை ஏற்படும்.


Real estate investment ideas... Click Here to Learn More


மேலும் உங்களுக்காக

Your Daily Tarot Reading