ADVERTISEMENT

இன்றைய திருக்கணித தமிழ் பஞ்சாங்கம்

29-10-2024 • Hosur, ஓசூர்
கணிக்கப்படுகிறது...

ஐந்திறன் நாள் & சூரிய நேரம் 29-10-2024

தமிழ் நாள் கலி:5126 குரோதி ஆண்டு
ஐப்பசி 12
கிழமை செவ்வாய்
பஞ்சாங்கம் ஊர் Hosur, ஓசூர்
சூரிய உதயம் / அஸ்தமனம் 🌅 06:11 AM
🌇 05:53 PM

பஞ்சாங்க ஐந்து அங்கங்கள்

விண்மீன் (நட்சத்திரம்) உத்திரம் 29-10-2024 06:33 PM வரை
திதி தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்) - துவாதசி 29-10-2024 10:31 AM வரை
யோகம் ஐந்திரம் 29-10-2024 07:47 AM வரை
கரணம் தைதுலம்
அமிர்தாதி யோகம் அமிர்தயோகம் (மிகவும் சிறப்பான நேரம்)

நல்ல நேரம் & ராகு காலம்

நல்ல நேரம் (காலை) 07:45 AM - 08:45 AM
நல்ல நேரம் (மாலை) 04:45 PM - 05:45 PM
ராகு காலம் 02:57 PM - 04:25 PM
எமகண்டம் 09:06 AM - 10:34 AM
குளிகன் 12:02 PM - 01:30 PM
சந்திராஷ்டமம் கும்பம் (அவிட்டம்)
வார சூலை & பரிகாரம் வடக்கு | பரிகாரம்: பால்

இன்றைய பஞ்சாங்க பலன்கள் & கண் / உயிர்

நட்சத்திர பலன் (உத்திரம்) கருவுற, பூ முடிக்க, சீமந்தம், அன்னதானம் வழங்க, சாமி கும்பிட, திருமணம், காது குத்த, கல்வி துவங்க, நகை அணிய, பூஜை அறை அமைக்க, புது வீடு புக, தாலி செய்ய, கடல் பயணம் மேற்கொள்ள ஏற்ற நாள்.
திதி பலன் (துவாதசி) துவாதசி திதியில் செல்வம், தானியங்கள் மூலம் வருவாய் ஈட்டுதல், தான தர்மங்கள், நிலையான நற்காரியங்கள் அனைத்தும் செய்யலாம்.
கண் (நேத்திரம்) / உயிர் (ஜீவன்) கண்: 0  |  உயிர்: ½
திருமண சக்கரம் வடகிழக்கு

இன்றைய கிரக நிலை சக்கரங்கள் (ராசி & நவாம்சம்)

மீனம்ராகுமேஷம்ரிஷபம்குரு (வ)மிதுனம்கும்பம்சனி (வ)கடகம்செவ்மகரம்சிம்மம்தனுசுவிருச்சிகம்சுக்துலாம்சூரிபுதலக்கன்னிசந்கேதுஇராசி சக்கரம்29-10-2024 • 06:11 AMதிருக்கணித பஞ்சாங்கம்
மீனம்சனி (வ)மேஷம்கேதுரிஷபம்மிதுனம்புதகும்பம்சந்கடகம்மகரம்சூரிலக்சிம்மம்செவ்குரு (வ)தனுசுசுக்விருச்சிகம்துலாம்ராகுகன்னிநவாம்ச சக்கரம்29-10-2024 • 06:11 AMதிருக்கணித பஞ்சாங்கம்

* சூரிய உதய நேரத்திற்கான திருக்கணித கிரக நிலைகள். (வ) = வக்ர கதி, மஞ்சள் கட்டம் = இன்றைய சந்திர ராசி.

இன்றைய கிரக பாகைகள் (Planetary Degrees)

கிரகம் ராசி பாகை (Deg) நட்சத்திரம் பாதம் அதிபதி நவாம்சம் நிலை
சூரியன் துலாம் 11° 52' 56" சுவாதி 2 ராகு மகரம் நேர் கதி
சந்திரன் கன்னி 03° 56' 00" உத்திரம் 3 சூரியன் கும்பம் நேர் கதி
செவ்வாய் கடகம் 03° 33' 46" பூசம் 1 சனி சிம்மம் நேர் கதி
புதன் துலாம் 29° 00' 37" விசாகம் 3 குரு மிதுனம் நேர் கதி
குரு ரிஷபம் 26° 29' 13" மிருகசீரிடம் 1 செவ்வாய் சிம்மம் வக்ரம் (R)
சுக்கிரன் விருச்சிகம் 19° 19' 44" கேட்டை 1 புதன் தனுசு நேர் கதி
சனி கும்பம் 18° 45' 27" சதயம் 4 ராகு மீனம் வக்ரம் (R)
ராகு மீனம் 10° 40' 52" உத்திரட்டாதி 3 சனி துலாம் நேர் கதி
கேது கன்னி 10° 40' 52" அஸ்தம் 1 சந்திரன் மேஷம் நேர் கதி
லக்னம் துலாம் 11° 04' 14" சுவாதி 2 ராகு மகரம் நேர் கதி

இன்றைய கௌரி பஞ்சாங்கம் (பகல்)

ரோகம்
06:11 AM - 07:39 AM
உத்தி
07:39 AM - 09:06 AM
சோரம்
09:06 AM - 10:34 AM
லாபம்
10:34 AM - 12:02 PM
விஷம்
12:02 PM - 01:30 PM
தனம்
01:30 PM - 02:57 PM
அமிர்தம்
02:57 PM - 04:25 PM
ரோகம்
04:25 PM - 05:53 PM

உங்கள் நட்சத்திர தாரா பலன்

வாட்ஸ்அப்பில் பகிர்க

திருக்கணித பஞ்சாங்கம் என்றால் என்ன? இதை எப்படிப் பார்ப்பது?

பஞ்சாங்கம் என்பது 'பஞ்ச' (ஐந்து) + ' அங்கம்' (திறன்கள்) ஆகிய ஐந்து முதன்மையான நேர அளவுகளைக் கொண்ட ஒரு தொன்மையான வானியல் நாள்காட்டி ஆகும். புதிய வானியல் கணித முறைப்படி (Thirukkanitha Method), துல்லியமான கோள்களின் நிலைகளைக் கொண்டு இந்தப் ஐந்திறன் நாள்காட்டி - பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.

பஞ்சாங்கத்தின் 5 முதன்மையான திறன்கள்:

  • திதி (Tithi) - நிலவு நாள்: சூரியனுக்கும் நிலவிற்கும் இடையே உள்ள தொலைவை குறிப்பது. வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்கள் இதன் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன.
  • வாரம் (Vara) - கிழமை: ஞாயிறு முதல் காரி (சனி) வரையிலான ஏழு கிழமைகள். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு கோள் உரிமையாளராக உள்ளது.
  • நட்சத்திரம் (Nakshatra) - விண்மீன்: வான மண்டலத்தில் நிலவு சஞ்சரிக்கும் 27 நட்சத்திரக் கூட்டங்களைக் குறிப்பது. நல்ல செயல்கள் செய்வதற்கு நட்சத்திரப் பொருத்தம் முதன்மையான தேவை என்ற நம்பிக்கை நிலவுகிறது.
  • யோகம் (Yoga): சூரியன் மற்றும் சந்திரனின் இணைந்த இயக்கத்தால் உருவாகும் 27 வகை யோகங்கள் (எடுத்துக்காட்டாக: அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம்).
  • கரணம் (Karana): ஒரு திதியின் பாதி அளவே கரணம் எனப்படும். இது ஒரு செயலின் வெற்றியைத் முடிவெடுக்கும் நுண்ணிய கால அளவாகும்.

நல்ல செயல் தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

  • நல்ல நேரம் & கௌரி பஞ்சாங்கம்: புதிய முயற்சிகள், ஒப்பந்தங்கள் மற்றும் நல்ல செயல்களை தொடங்க காலை, மாலை நல்ல நேரம் மற்றும் கௌரி பஞ்சாங்கத்தில் உள்ள அமிர்தம், லாபம், தனம் ஆகிய நேரங்களைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு.
  • தவிர்க்க வேண்டிய நேரங்கள்: தினசரி வரும் ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. (குளிகை நேரத்தில் செய்யும் காரியங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும் என்பதால், சுப காரியங்களைச் செய்யலாம்; ஆனால் துக்க காரியங்களைத் தவிர்க்க வேண்டும்).
  • சந்திராஷ்டமம்: உங்கள் பிறந்த ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் நாளே சந்திராஷ்டமம். அன்று முக்கிய முடிவுகள் எடுப்பதையும், வாக்குவாதங்களையும் தவிர்த்து அமைதியாக இருப்பது நலம்.
  • வார சூலை: குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பிட்ட திசையில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில், பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தைச் செய்துவிட்டுப் பயணத்தைத் தொடங்கலாம்.
குறிப்பு: திருக்கணித பஞ்சாங்கம் என்பது புதிய வானியல் அடிப்படையிலானது. தொன்மையான கோயில் திருவிழாக்கள் மற்றும் சடங்குகளுக்கு எங்களது முகூர்த்த நாள் மற்றும் கோவில் திருவிழா பஞ்சாங்கம் பக்கத்தைப் பார்க்கவும்.
ADVERTISEMENT
HosurOnline – பஞ்சாங்கம் மற்றும் ஆன்மிகப் பகுதிகள்

Featured

Learn Astrology